அப்பாடா..! ஒரு வழியா ஹைதராபாத் அணி ‘அதை’ செஞ்சிட்டாங்க.. கூடவே யாரும் எதிர்பார்க்காத ஒரு ‘ட்விஸ்ட்’-யையும் வச்சிட்டாங்க..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பஞ்சாப் அணிக்கு எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணி இரண்டு மாற்றங்களுடன் களமிறங்குகிறது.

ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை சென்னை சேப்பாக்கம் மற்றும் மும்பை வான்கடே ஆகிய 2 மைதானங்களில் மட்டுமே போட்டிகள் மாறிமாறி நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இன்றைய 14-வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடுகின்றன.

இதுவரை இரு அணிகளும் 3 போட்டிகளில் விளையாடி உள்ளன. அதில் பஞ்சாப் கிங்ஸ் அணி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. ஆனால் ஹைதராபாத் அணி, தாங்கள் விளையாடிய 3 போட்டியிலும் தோல்வியை தழுவி, புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. அதனால் இன்றைய போட்டியில் இரு அணிகளும் வெற்றி பெற முனைப்பு காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இப்போட்டியில் ஹைதராபாத் அணி, இரண்டு மாற்றங்களை செய்துள்ளது. அதில் ஒன்று, பலரும் எதிர்பார்த்த கேன் வில்லியம்சன் ப்ளேயிங் லெவனில் இடம்பெற்றுள்ளார். ஹைதராபாத் அணி ஒவ்வொரு முறை தோல்வி அடையும்போதும், கேன் வில்லியம்சனை அணியில் எடுக்காததை, ரசிகர்கள் உட்பட முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் விமர்சனம் செய்து வந்தனர். இதனால் இன்று அவர் ப்ளேயிங் லெவனில் இடம்பிடித்தது, ஹைதராபாத் அணி பலமாக கருதப்படுகிறது.

அதேவேளையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் கேதர் ஜாதவ் ப்ளேயிங் லெவனில் இடம்பிடித்து, ஹைதராபாத் அணிக்காக தனது முதல் போட்டியை விளையாட உள்ளார். இவர் கடந்த ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சார்பாக விளையாடினார். முக்கியமான பல போட்டிகளில் அவர் ஆடிய விதம் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதனால் சிஎஸ்கே அணியில் அவர் விடுவிக்கப்பட்டார். இதனை அடுத்து இந்த ஆண்டு நடந்த ஐபிஎல் மினி ஏலத்தில், அடிப்படை விலையான 2 கோடிக்கு ஹைதராபாத் அணி அவரை எடுத்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்