'வாய வச்சுட்டு சும்மா இருக்க வேண்டியது தான'... 'ஐபிஎல்' ஆசை!.. உளறிக் கொட்டிய ஆர்ச்சர்!.. ஏக கடுப்பில் இங்கிலாந்து வாரியம்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுமீண்டும் ஐபிஎல் நடைபெறும் என்று அறிவித்தால், நான் விளையாட முடியும் என்று ஜோஃப்ரா ஆர்ச்சர் அறிவித்திருக்கிறார். ஆனால், அதில் ஒரு புது சிக்கல் எழுந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா 2வது அலை உச்சத்தில் உள்ளது. நாள்தோறும் மூன்றரை லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். ஆயிரக்கணக்கானோர் இறந்து வருகின்றனர்.
இதற்கிடையே, ரசிகர்களுக்கு சற்று ஆறுதலாக இருந்த ஒரே விஷயம் ஐபிஎல் 2021. ஆனால், அங்கும் பயோ-பபுளை மீறி நுழைந்த கொரோனா, கொல்கத்தா வீரர் வருண் சக்கரவர்த்தியை தாக்க, அதன் பிறகு பல வீரர்களுக்கும் தொற்று ஏற்பட, தேதி குறிப்பிடாமல் தொடரை ஒத்தி வைத்தது பிசிசிஐ.
இந்நிலையில், ஜோஃப்ரா ஆர்ச்சர் முழங்கையில் ஏற்பட்டிருந்த காயத்தால் ஐபிஎல் தொடரில் முதல் பாதியில் பங்கேற்காமல் இருந்தார். ஆனால், சமீபத்தில் சசெக்ஸ் கிரிக்கெட் யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், நான் இந்தியாவுக்குச் சென்றிருந்தால் எப்படியும் சீக்கிரம் வீடு வந்திருக்கலாம். மீண்டும் ஐபிஎல் நடைபெறும் என்று அறிவித்தால், நான் விளையாட முடியும் என்று நம்புகிறேன்.
காயம் ஏற்பட்டவுடன் இந்தியாவுக்குச் செல்லக்கூடாது என்பது நான் எடுத்த கடினமான முடிவு. நான் நிச்சயம் இந்தியா சென்றிருக்க முடியும். அப்படி சென்றிருந்தால், என்னால் எத்தனை போட்டிகளில் ஆடியிருக்க முடியும் என்று தெரியவில்லை என்று கூறியுள்ளார்.
ஆனால், இவரது இந்த கருத்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் அறிவிப்புக்கு முரணாக உள்ளது. ஐபிஎல் 2021 சீசனின் எஞ்சியுள்ள போட்டிகளில் இங்கிலாந்து அணியின் வீரர்கள் விளையாடுவது சந்தேகம் என இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரிய இயக்குனர் ஆஷ்லே ஜைல்ஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், கேப்டன் மோர்கன், பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜாஸ் பட்லர் உள்ளிட்ட இங்கிலாந்து வீரர்கள் ஐபிஎல் தொடரில் எஞ்சியுள்ள போட்டிகளில் விளையாடுவது சிரமம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், அடுத்தடுத்த போட்டி அட்டவணைப்படி எங்களுக்கு நிறைய சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் இருக்கின்றன. அவற்றில் இங்கிலாந்து வீரர்களை முழுமையாகப் பயன்படுத்த திட்டமிட்டு வருகிறோம். ஐபிஎல் போட்டி மீண்டும் எப்போது, எங்கு நடத்தப்படும் என்பது இப்போது வரைக்கும் யாருக்கும் தெரியாது.
அதே சமயம், நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து எங்களுக்கு தொடர்ச்சியாக போட்டிகள் உள்ளன. இதில் டி20 உலகக் கோப்பை மற்றும் ஆஷஸ் டெஸ்ட் தொடர் முக்கியமானது. இந்த போட்டிகளை நாங்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளோம் என்றும் கூறியுள்ளார்.
இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் இந்த முடிவால், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், ஜோஃப்ரா ஆர்ச்சர், லிவிங்ஸ்டன் (ராஜஸ்தான் ராயல்ஸ்), சாம் கர்ரன், மொயீன் அலி (சென்னை சூப்பர் கிங்ஸ்), கிறிஸ் ஜோர்டான், டேவிட் மலான் (பஞ்சாப் கிங்ஸ்), கிறிஸ் வோக்ஸ், சாம் பில்லிங்ஸ், டாம் கர்ரன் (டெல்லி கேபிடல்ஸ்), இயான் மோர்கன் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்), ஜானி பேர்ஸ்டோ, ஜேசன் ராய் (ஐதராபாத் சன் ரைசர்ஸ்) ஆகிய 14 வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாட முடியாமல் போகலாம். இத்தகைய சூழலில், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஐபிஎல்-ல் விளையாட விருப்பம் தெரிவித்திருப்பது இங்கிலாந்து கிரிக்கெட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'வருமானமே இல்ல... எப்படியாவது ஐபிஎல் நடத்தி... கல்லா கட்ட ப்ளான்'!.. 'ஒரே அடியாக ஊத்தி மூடிய துயரம்'!.. சோதனை மேல் சோதனை!
- வாழ்வா சாவா போராட்டம்!.. இந்த முறை நிரூபித்தே ஆக வேண்டும்!.. ஆனா எல்லாமே கைய மீறி போயிடுச்சு!.. வேதனையில் சாஹா!!
- கேப்டன் பொறுப்பை தோனி கொடுத்தபோது ‘கோலி’ சொன்ன அந்த வார்த்தை.. சொன்ன மாதிரியே செஞ்சு காட்டிய ‘கிங்’ கோலி..!
- 'திண்ணைல இருந்தவனுக்கு... திடுக்குனு வந்துச்சாம் சான்ஸ்'!... காலியாக இருக்கும் கேப்டன் பதவி!.. ஸ்ரேயாஸ் போடும் புது கணக்கு!!
- ‘இது கொஞ்சம் சவாலான விஷயம்தான்’!.. ஐபிஎல் ‘இந்த’ நாட்டுல நடத்த வாய்ப்பு இருக்கு.. ரசிகர்களுக்கு ‘குட் நியூஸ்’ சொன்ன RR அணியின் உரிமையாளர்..!
- 'செம்ம கில்லாடிங்க அவரு!.. எங்க வித்தைய வச்சு... எங்களுக்கே தண்ணி காட்டுறாரு'!.. டிராவிட் 'மாஸ்டர் ப்ளான்'!.. அலறும் சீனியர்ஸ்!!
- ‘அது என் தப்புதான், அன்னைக்கு நான் அப்படி செஞ்சிருக்கக் கூடாது’!.. 10 வருசத்துக்கு முன்னாடி நடந்த ‘ரன் அவுட்’ சர்ச்சை.. இங்கிலாந்து வீரர் விளக்கம்..!
- போச்சு!.. இனி அவ்ளோதான்!.. மனசாட்சி இல்லையா?.. எப்போ வீட்டுக்கு போவோம்னு தெரியாத மைக் ஹசி!.. பயங்கரமான லாக்!!
- மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் நடந்தா... முதல் சிக்கல் 'சிஎஸ்கே'வுக்கு தான்!.. என்ன இப்படி ஆகிடுச்சு?.. கடைசி நேரத்தில் காலை வாரி விட்ட முடிவு!
- 'தம்பி... நான் சொல்றத நீ செஞ்சா... உனக்கு மிகப்பெரிய எதிர்காலம் இருக்கு'!.. பண்ட் கரியரை மாற்றப் போகும் கவாஸ்கரின் ப்ளான்!