VIDEO: ‘அது எப்படி பாஸ்’!.. ‘எந்த பக்கம் திரும்பினாலும் நீங்கதான் தெரியுறீங்க’!.. ஜடேஜா செஞ்ச ‘தரமான’ சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் 4 கேட்ச்களை பிடித்து சிஎஸ்கே வீரர் ஜடேஜா அசத்தினார்.

நடப்பு ஐபிஎல் தொடரின் 12-வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், இளம்வீரர் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 188 ரன்களை எடுத்தது.

இதனைத் தொடர்ந்து 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி விளையாடியது. அதில் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாஸ் பட்லர் மற்றும் மனன் வோஹ்ரா களமிறங்கினர். அப்போது சாம் கர்ரன் வீசிய போட்டியின் 4-வது ஓவரில் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து மனன் வோஹ்ரா அவுட்டானார். இதனை அடுத்து களமிறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சனும் (1 ரன்), சாம் கர்ரனின் ஓவரில் அவுட்டாகி வெளியேறினார்.

இதனைத் தொடர்ந்து ஷிவம் துபே 17 ரன்களில், ஜடேஜாவின் ஓவரில் எல்பிடபுள்யூ ஆகி வெளியேறினார். அடுத்ததாக களமிறங்கிய டேவிட் மில்லர் 2 ரன்னில் அவுட்டாகி ராஜஸ்தானுக்கு அதிர்ச்சி கொடுத்தார். இவரைத் தொடர்ந்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கிறிஸ் மோரிஸ் டக் அவுட்டாகி வெளியேறினார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் மட்டுமே ராஜஸ்தான் அணி எடுத்தது. இதன்மூலம் 45 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது.

இப்போட்டியில் 4 ஓவர்கள் வீசிய சிஎஸ்கே வீரர் ஜடேஜா, 28 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதுமட்டுமல்லாமல் 4 கேட்சுகளை பிடித்து அசத்தினார். மைதானத்தில் எந்த பக்கம் திரும்பினாலும் ஜடேஜாதான் பீல்டிங் செய்கிறார் என தெரியும் என்ற அளவுக்கு எல்லா திசையிலும் நின்று கேட்சுகளை பிடித்தார். கடைசியாக ஜெயதேவ் உனத்கட் அடித்த பந்தை கேட்ச் பிடித்த ஜடேஜா, உற்சாகமாக 4 விரல்களை காட்டினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்