ஐபிஎல்-லில் கொரோனா பரவியது எப்படி?.. வருண் சக்கரவர்த்தி முதல் அமித் மிஸ்ரா வரை... நடுங்கவைக்கும் தொற்றின் வேகம்!.. ஆடிப்போன பிசிசிஐ!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடரில் வீரர்களுக்குள் கொரோனா எப்படி பரவியது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
மிகவும் பாதுகாப்புடன் நடத்தப்பட்டு வந்த 2021 ஐபிஎல் தொடர், திடீரென அதிகரித்த கொரோனா பாதிப்பால் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த மே 3ம் தேதி வருண் சக்கரவர்த்திக்கு முதன் முதலில் கொரோனா உறுதி செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து ஒவ்வொரு வீரராக பரவியுள்ளது.
கொல்கத்தா அணியை சேர்ந்த வருண் சக்கரவர்த்தி தனது தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக பயோ பபுளை விட்டு வெளியேறி மருத்துவமனைக்கு சென்று ஸ்கேன் செய்துள்ளார். பின்னர், எந்தவித குவாரண்டைனிலும் இல்லாமல் அணியின் பபுளுக்குள் நுழைந்துள்ளார். இங்கு தான் பிரச்னையே ஆரம்பித்துள்ளது.
மே 1ம் தேதி மருத்துவமனையில் இருந்து திரும்பிய வருண் சக்கரவர்த்தி, தனது சக வீரர் சந்தீப் வாரியருடன் ஒன்றாக அமர்ந்து மதிய உணவை சாப்பிட்டுள்ளார். அப்போது அவர்கள் மிக அருகில் அமர்ந்துக்கொண்டு நீண்ட நேரம் பேசிக்கொண்டு உணவருந்தியுள்ளனர். பின்னர், இருவரும் சேர்ந்து ஒன்றாக பயிற்சி ஆட்டத்திற்கு சென்றுள்ளனர். ஆனால், வருண் அப்போது உடல்நிலை சரியில்லை எனக்கூறிவிட்டு அறைக்கு சென்றுவிட்டார். பின்னர் சந்தீப் மட்டும் கொல்கத்தா அணியுடன் பயிற்சிக்கு சென்றுள்ளார்.
அன்றைய தினம் கொல்கத்தா - டெல்லி என இரு அணிகளுக்கும் ஒரே நேரத்தில் பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்றுள்ளன. வருணுடன் தொடர்பில் இருந்திருந்த சந்தீப் வாரியர் நேராக டெல்லி கேப்பிடல்ஸ் வீரர் அமித் மிஸ்ராவிடம் சென்று நீண்ட நேரம் பேசி சிரித்துள்ளார். பின்னர், இருவரும் அவரவர் அணிகளுடன் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த பயிற்சிக்கு பின்னர் ஹோட்டல் அறைக்கு சென்ற அமித் மிஸ்ரா தனக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறியுள்ளார். இதனையடுத்து அவர் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டார். மற்ற வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர். அதே போல கொல்கத்தா அணியில் சந்தீப் வாரியரும் தனிமைப்படுத்தப்பட்டார். இன்னும் எத்தனை வீரர்கள் இவர்களை போன்று பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது கேள்விக்குறியாக உள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'அவங்க' ஒண்ணும் 'முட்டாள்கள்' இல்ல சரியா...! 'ரொம்ப தப்பு பண்ணிட்டீங்க...' - பிசிசிஐ-ஐ விளாசி தள்ளிய இங்கிலாந்து முன்னாள் கேப்டன்...!
- ‘போட்டியை ஒத்திதான் வச்சிருக்கோம், நிறுத்தல’!.. மறுபடியும் ஐபிஎல் போட்டி எப்போது தொடங்கும்?.. ஐபிஎல் தலைவர் ‘சூசகமாக’ சொன்ன பதில்..!
- ‘சிஎஸ்கே அணியை துரத்தும் கொரோனா’!.. மீண்டும் ஒருவருக்கு தொற்று உறுதி.. வெளியான தகவல்..!
- 'ஆன்லைன் வீடியோ கால்!.. பதறியடித்து ஓடிவந்த அணி நிர்வாகிகள்'!.. வெறும் 10 நிமிடத்தில் ஐபிஎல்-ஐ கேன்சல் செய்த பிசிசிஐ!.. திடுக்கிடும் பின்னணி!
- இந்த வருசம் எப்படியும் ‘கப்’ ஜெயிச்சிறலாம்னு இருந்தோமே.. இப்படி ‘மண்ணை’ அள்ளி போட்டாங்களே.. இணையத்தில் தெறிக்கும் மீம்ஸ்..!
- 'கொந்தளித்த ரசிகர்கள்'...'Daddy வீட்டுக்கு வந்துருங்க ப்ளீஸ்'... 'நட்சத்திர வீரரின் மகள் வெளியிட்ட உருக்கமான புகைப்படம்'... தவிக்கும் செல்ல மகள் !
- துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட முன்னாள் ‘கிரிக்கெட்’ வீரர்.. ஆஸ்திரேலியாவில் நடந்த அதிர்ச்சி..!
- ஐபிஎல்-ல விளையாடணும்னு ‘ஆசையா’ வந்த மனுசன்.. கடைசியில இப்படி ஆகிடுச்சே.. நொந்துபோன சிஎஸ்கே வீரர்..!
- ‘எச்சரிக்கை செய்த கிரிக்கெட் கிளப்புகள்’!.. ஐபிஎல் தொடரை ஒத்திவைக்கும் முன் நடந்த ‘அவசர’ மீட்டிங்கில் என்ன நடந்தது..?
- 'சொந்த நாட்டுக்குள்ள அனுமதி கிடையாது... இங்க ஐபிஎல்லும் இல்ல'!.. 'எங்க போறது?.. என்ன செய்றது'?.. ரண வேதனையில் ஆஸ்திரேலிய வீரர்கள்!