அம்பயர் அவுட் கொடுத்ததும் ‘கேதர் ஜாதவ்’ எடுத்த முடிவு.. டீம் இருக்குற நிலைமையில இது தேவையா..? வச்சு செய்யும் நெட்டிசன்கள்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணி வீரர் கேதர் ஜாதவ் ரிவியூ கேட்டது விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

ஐபிஎல் (IPL) தொடரின் 33-வது லீக் போட்டி இன்று (22.09.2021) துபாய் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் (DC), கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் (SRH) மோதுகின்றன. டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

 

அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னரும், சாஹாவும் களமிறங்கினர். இதில் அன்ரிச் நார்ட்ஜே வீசிய ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே டக் அவுட்டாகி வார்னர் வெளியேறினார். இதனைத் தொடர்ந்து சாஹாவும் (18 ரன்கள்) வெளியேற, அடுத்து வந்த கேப்டன் கேன் வில்லியம்சனும் 18 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். இதனை அடுத்து களமிறங்கிய மனிஷ் பாண்டேவும் (17 ரன்கள்) ரபாடாவின் ஓவரில் ஆட்டமிழந்தார். அதனால் 61 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை ஹைதராபாத் அணி இழந்தது.

இந்த சமயத்தில் கேதர் ஜாதவ் (Kedar Jadhav) மற்றும் அப்துல் சமத் (Abdul Samad) ஆகிய இருவரும் ஜோடி சேர்ந்தனர். அப்போது அன்ரிச் நார்ட்ஜே வீசிய 13-வது ஓவரில் கேதர் ஜாதவ் (3 ரன்கள்) எல்பிடபுள்யூ ஆகி அவுட்டானார். ஆனால் உடனே மூன்றாவது அம்பயரிடம் கேதர் ஜாதவ் ரிவியூ (Review) கேட்டார். அதில் பந்து காலில் பட்டது தெளிவாக தெரிந்ததால், மூன்றாம் அம்பயரும் அதை அவுட் என அறிவித்தார். அணி இக்கட்டான சமயத்தில் இருக்கும் போது தேவையில்லாமல் ஒரு ரிவியூவை கேதர் ஜாதவ் வீணடித்தார். இதனை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில், 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 134 ரன்களை ஹைதராபாத் அணி எடுத்தது. இதில் அதிகபட்சமாக அப்துல் சமத் 28 ரன்கள் எடுத்தார். டெல்லி அணியைப் பொறுத்தவரை ரபாடா 3 விக்கெட்டுகளும், அன்ரிச் நார்ட்ஜே மற்றும் ஆவேஷ் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்