'கடைசியாக இருந்த ஒரே ஒரு நம்பிக்கை!.. அதுவும் போச்சு'!.. இங்கிலாந்து கரார்!.. பேச்சுவார்த்தையை நிறுத்திய பிசிசிஐ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல்-காக இங்கிலாந்து டெஸ்ட் தொடரை மாற்றி அமைப்பது குறித்து பிசிசிஐ-இடம் இருந்து புதிய தகவல் கிடைத்துள்ளது.

கொரோனா காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள ஐபிஎல் தொடரை மீண்டும் நடத்துவதற்கான பேச்சுக்கள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஐபிஎல் தொடரை இங்கிலாந்திலும் நடத்துவதற்கான பேச்சுவார்த்தையில் பிசிசிஐ களமிறங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் தொடர் ஆக.4ம் தேதி முதல் செப்டம்பர் 14 வரை நடைபெறுகிறது. ஆனால் அங்கு செப்டம்பர் மாதம் ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ-க்கு யோசனைகள் உள்ளது. இதனால், கடைசி டெஸ்ட் போட்டியை மட்டும் செப்டம்பரில் இருந்து ஜூலை கடைசி வாரத்திற்கு மாற்ற பிசிசிஐ கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. 

ஆனால், பிசிசிஐ-ன் கோரிக்கையை ஏற்பதில் இங்கிலாந்துக்கு சிக்கல் உள்ளது. ஏனெனில், இங்கிலாந்து நாட்டின் உள்நாட்டு தொடரான 'தி ஹண்ட்ரெட்' ஜூலை 24ம் முதல் ஆகஸ்ட் 21ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் போட்டியை ஜூலை மாதத்திற்கு ஒத்திவைத்தால், ஹண்ட்ரெட் தொடருக்கு பாதிப்பு ஏற்படும் எனக்கூறி மறுத்துவிட்டது. 

இந்நிலையில், இதுகுறித்த பிசிசிஐ வட்டார தகவலில், பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு கோரிக்கையும் வைக்கவில்லை. பேச்சுவார்த்தை அளவில் தான் இருந்தது. ஆனால் தற்போது பிசிசிஐ-ன் கோரிக்கையை இங்கிலாந்து ஏற்க வாய்ப்பே இல்லை என தெரிந்துவிட்டது. இதனால் இனி அதிகாரப்பூர்வ கோரிக்கை இருக்காது. 

இங்கிலாந்தின் உள்நாட்டு தொடரான ஹண்ட்ரெட் ஜூலை 24 முதல் ஆக.21 வரை நடக்கிறது. அதற்கான தொலைக்காட்சி ஒளிபரபரப்பு, ஸ்பான்சர்ஷிப் என அனைத்தும் முடிந்துவிட்டது. அதே போல பிசிசிஐ மாற்றி அமைக்கக்கோரிய 5வது டெஸ்ட் போட்டியின் 3 நாட்களுக்கான டிக்கெட்கள் விற்கப்பட்டுவிட்டன. எனவே, டெஸ்ட் தொடரை மாற்றி அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளே இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்