VIDEO: என்ன ‘கைப்புள்ள’ வடிவேலு மாதிரி படுத்துட்டாப்ல.. யாருப்பா அந்த ப்ளேயர்..? தெறிக்கும் மீம்ஸ்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி தோல்வியை தழுவியது.
ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் (DC) மற்றும் இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் (KKR) அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் (IPL) லீக் போட்டி நேற்று ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான் (Shikhar Dhawan) மற்றும் ஸ்டீவன் ஸ்மித் (Steven Smith) களமிறங்கினர். ஆரம்பம் முதலே இந்த கூட்டணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அப்போது வெங்கடேஷ் ஐயர் வீசிய 5-வது ஓவரில் ஷிகர் தவான் (24 ரன்கள்) அவுட்டாகி வெளியேறினார்.
இதனை அடுத்து வந்த ஸ்ரேயாஸ் ஐயர் 1 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். இந்த சமயத்தில் களமிறங்கிய ரிஷப் பந்துடன் கூட்டணி அமைத்த ஸ்டீவன் ஸ்மித் அதிரடி காட்ட ஆரம்பித்தார். அப்போது லோக்கி பெர்குசன் ஆட்டத்தின் 13-வது ஓவரை வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தை எதிர்கொண்ட ஸ்டீவன் ஸ்மித், பின்னால் பந்தை தூக்கி அடிக்க முயன்றார். ஆனால் எதிர்பாராத விதமாக பந்து அவரது தொடைப்பகுதியைத் தாக்கியது. இதனால் வலி தாங்க முடியாமல் மைதானத்தில் சில நொடிகள் படுத்துவிட்டார்.
இதனை அடுத்து அந்த ஓவரின் அடுத்த பந்தே போல்டாகி ஸ்டீவன் ஸ்மித் (39 ரன்கள்) வெளியேறினார். இவரைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து அவுட்டாகினர். கேப்டன் ரிஷப் பந்த் மட்டுமே 39 ரன்கள் அடித்து கடைசி ஓவர் வரை தாக்குப்பிடித்தார். அதனால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 127 ரன்களை டெல்லி அணி எடுத்தது.
கொல்கத்தா அணியை பொறுத்தவரை லோக்கி பெர்குசன், வருண் சக்கரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் ஐயர் தலா 2 விக்கெட்டுகளும், டிம் சவுத்தி 1 விக்கெட்டும் எடுத்தனர்.
இதனை அடுத்து பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, 18.2 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் எடுத்தது. இதனால் 3 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக நிதிஷ் ரானா 36 ரன்களும், சுப்மன் கில் 30 ரன்களும் எடுத்தனர். இந்த நிலையில் ஸ்டீவன் ஸ்மித் மைதானத்தில் படுத்திருந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி பலரும் மீம்ஸ்கள் உருவாக்கி பதிவிட்டு வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- அந்த ‘ரெண்டு’ பேர்ல ஒருத்தருக்குதான் இடம்.. என்ன முடிவு எடுப்பார் ‘தல’ தோனி..?
- பாவங்க மனுசன்.. ஐபிஎல்-ல அறிமுகமான ‘முதல்’ மேட்ச்லயே இப்படியா நடக்கணும்.. சோகமாக வெளியேறிய ‘RCB’ வீரர்..!
- VIDEO: இதுல யார் மேல தப்புன்னு தெரியலயே.. பிராவோவை கோபமாக திட்டிய தோனி.. அப்படி என்ன நடந்தது..?
- VIDEO: எப்படிங்க மனுசன் இவ்ளோ கரெக்ட்டா கணிக்கிறாரு..! ‘இல்லவே இல்லைன்னு தலையாட்டிய அம்பயர்’.. சிரிச்சிக்கிட்டே ‘மாஸ்’ காட்டிய தோனி..!
- VIDEO: என்னங்க ஆச்சு ‘கிங்’ கோலிக்கு.. மறுபடியும் ரசிகர்களை ‘சோகத்தில்’ ஆழ்த்திய விராட்..!
- மும்பைக்கு வாய்ப்பில்லை.. இந்த தடவை ‘கோப்பை’ அவங்களுக்குதான்.. அடித்து கூறும் முன்னாள் கேப்டன்.. என்ன காரணம்..?
- என்னங்க சொல்றீங்க..! மனுசன் இப்போதான் ஒரு ‘ஷாக்’ கொடுத்தாரு.. அதுக்குள்ள இன்னொன்னா..?
- எதை எதோட கனெக்ட் பண்றீங்க..! கடைசி நேரத்துல ஐபிஎல்ல இருந்து ‘விலக’ என்ன காரணம்..? இங்கிலாந்து வீரர் விளக்கம்..!
- என் முழு கவனமும் ஐபிஎல் மேலதான் இருக்கு.. டி20 உலகக்கோப்பை அணியில் இடம் கிடைக்காததை நினைச்சு வருத்தப்படல.. இளம் வீரர் ஓபன் டாக்..!
- ‘வந்த உடனே எல்லாம் உனக்கு சான்ஸ் கிடைக்காது’!.. அப்பவே தெளிவான எடுத்து சொன்ன ‘தல’.. சிஎஸ்கே வீரர் பகிர்ந்த சீக்ரெட்..!