'வா தல... வா தல!.. 15 வருஷத்துக்கு முன்னாடி இருந்த அதே fire'!.. full formல் தல தோனி!.. இந்த ஐபிஎல்-ல தரமான சம்பவம் இருக்கு!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் தொடருக்கான பயிற்சி ஆட்டத்தில் சென்னை அணி கேப்டன் ருத்ரதாண்டவம் ஆடியுள்ளார்.

14வது ஐபிஎல் தொடர் வரும் ஏப்.9ம் தேதி சென்னையில் தொடங்குகிறது. இதற்காக அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தாலும் அனைவரின் பார்வையும் தோனியின் பக்கம் திரும்பியுள்ளது.

இந்நிலையில், நேற்றைய பயிற்சி ஆட்டத்தில் தோனி நீண்ட நாட்களுக்கு பிறகு அசத்தல் ஷாட்கள் மூலம் பெரிய ஸ்கோரை அடித்துள்ளார். இதனால் ரசிகர்கள் அணி நிர்வாகத்திடம் வீடியோ கேட்டு வருகின்றனர்.  

கிரிக்கெட் ரசிகர்களுக்கு தீனி போடும் ஐபிஎல் தொடரின் 14வது சீசன் ஏப்.9ம் தேதி தொடங்குகிறது. இதனால், அனைவரின் பார்வையும் தங்களது விருப்பமான வீரர்கள் மீது திரும்பியுள்ளன. அவர்கள் பயிற்சியில் எப்படி செயல்படுகின்றனர் என்ற அப்டேட்களை ரசிகர்கள் கோரி வருகின்றனர்.

குறிப்பாக சென்னை அணி கேப்டன் தோனி தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளதால் அவரின் பயிற்சி குறித்து தெரிந்துக்கொள்ள ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துள்ளனர். 

கடந்த ஆண்டு தோனிக்கு பேட்டிங்கிலும் சரி, கேப்டன்சியிலும் சரி விமர்சனங்கள் அடுத்தடுத்து விழுந்தது. குறிப்பாக ஐபிஎல் முதல் முறையாக தோனி கடந்த சீசனில் ஒரு அரை சதம் கூட அடிக்கவில்லை. மொத்தமாக அவர் 200 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். மேலும், அவருக்கு 40 வயது எட்டவுள்ளதால் அவரின் ஆட்டம் குறித்தும் பல்வேறு கேள்விகள் எழுந்தன. 

இந்நிலையில், நேற்று நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் தோனி வெறித்தனமான ஆட்டத்தை காட்டியுள்ளார். கடந்த சீசனில் தோனி டெஸ்ட் போட்டி போன்று நிதானமாக ஆடுகிறார், அல்லது வந்த வேகத்தில் கிளம்பிவிடுகிறார் என்றும் விமர்சிக்கப்பட்டது. ஆனால், நேற்றைய ஆட்டத்தில் 13 ஓவர்கள் வரை நின்று ஆடியுள்ள தோனி 60 ரன்களை விளாசியுள்ளார். இதில் சிறப்பு என்னவென்றால் 6 சிக்ஸர்களை பறக்கவிட்டுள்ளார்.  

இதுகுறித்து, முன்னர் பேசியிருந்த அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளர் ராஜீவ் குமார், தோனி எவ்வளவு ஸ்மார்டான நபர் என்பது நமக்கு தெரியும். அவரின் உடல்நிலை மற்றும் ஆட்டம் குறித்து அவர் நன்றாக புரிந்து வைத்துள்ளார். இந்த வயதிலும் பந்தை சரியாக கையாள்கிறார். எல்லோராலும் அப்படி செய்துவிட முடியாது.

இதை காண மகிழ்ச்சியாக உள்ளது. ஒவ்வொரு முறையும் பயிற்சிக்கு வரும் தோனி, ஆட்டம் குறித்து ஒரு புதிய திட்டத்துடன் வருகிறார். நாங்கள் அதுகுறித்து ஆலோசித்து வருகிறோம் என தெரிவித்தார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்