VIDEO: கடைசி ஓவர் வரை ‘பிபி’-யை எகிற வைச்ச சிஎஸ்கே.. ஆனா யாரும் எதிர்பார்க்காத மரண மாஸ் காட்டிய ‘தல’ தோனி..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி த்ரில் வெற்றி பெற்றுள்ளது.

VIDEO: கடைசி ஓவர் வரை ‘பிபி’-யை எகிற வைச்ச சிஎஸ்கே.. ஆனா யாரும் எதிர்பார்க்காத மரண மாஸ் காட்டிய ‘தல’ தோனி..!

சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி இன்று (30.09.2021) ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி (Dhoni) பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி, 20 ஓவர்களில் 134 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக சாஹா 44 ரன்கள் எடுத்தார்.

IPL 2021: CSK beat SRH by 6 wickets

சென்னை அணியைப் பொறுத்தவரை ஜோஸ் ஹசில்வுட் 3 விக்கெட்டுகளும், பிராவோ 2 விக்கெட்டுகளும், ஜடேஜா மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

இதனை அடுத்து 135 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ருதுராஜ் கெய்க்வாட் 45 ரன்களும், டு பிளசிஸ் 41 ரன்களும் எடுத்தனர். இதனை அடுத்து வந்த மொயின் அலி 17 ரன்களிலும், சுரேஷ் ரெய்னா 2 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட்டாகினர்.

இந்த சமயத்தில் ஜோடி சேர்ந்த கேப்டன் தோனி மற்றும் அம்பட்டி ராயுடு கூட்டணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆனாலும் ஹைதராபாத் அணி தனது சிறப்பான பந்துவீச்சின் மூலம், சிஎஸ்கேவை அச்சுறுத்தியது. இதனால் கடைசி 3 பந்துகளுக்கு 2 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலைக்கு சென்னை அணி சென்றது.

அப்போது கேப்டன் தோனி சிக்சர் விளாசி போட்டியை முடித்தார். இதனால் 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி த்ரில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் முதல் அணியாக சிஎஸ்கே தகுதி பெற்றுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்