'20 வருஷமா கொஞ்சம் கொஞ்சமா செதுக்கி கொண்டு வந்தாங்க'... 'போச்சா, ஒரே அறிவிப்புல எல்லாம் போச்சு'... 'இந்த பாவம் சும்மா விடுமா'?... பொங்கியெழுந்த கிரிக்கெட் ரசிகர்கள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கொரோனா காரணமாக நிறுத்தப்பட ஐபிஎல் போட்டிகள் மீண்டும் நடைபெற ஆரம்பித்துள்ளது.

பலரும் பெரிதும் எதிர்பார்த்த ஐபிஎல் போட்டிகள் மீண்டும் ஆரம்பித்துள்ளது. இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் ஐபிஎல் போட்டிகளைப் பலரும் கண்டு கழித்து வரும் நிலையில், இந்த உற்சாகமோ, சந்தோஷமோ இல்லாமல், ஏன் ஐபிஎல் போட்டிகளைப் பார்க்கக் கூடாத முடியாத நிலைக்கு ஒரு நாடு தள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இருக்கும் அந்த நாடு எது என்பதைப் பலரும் கணித்து இருப்பீர்கள். ஆம், ஆப்கானிஸ்தான். ஐபிஎல் போட்டிகளை ஆப்கானிஸ்தானில் ஒளிபரப்ப தாலிபான்கள் தடை விதித்துள்ளார்கள். அதற்கு அவர்கள் கூறியுள்ள காரணம் தான் பலரையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

ஐபிஎல் போட்டிகளில் பெண்களைக் காட்டுவார்கள், அதோடு கிரிக்கெட் வர்ணனையில் இஸ்லாம் எதிர்ப்புக் கொள்கைகள் இருக்கலாம் எனக் கூறி தாலிபான்கள் தடை வித்துள்ளார்கள். 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைப் பிடித்துள்ள தாலிபான்கள், இதற்கு முன்பு நாங்கள் செய்த தவறை செய்யமாட்டோம், மக்கள் அச்சப் பட தேவையில்லை என பல்வேறு கருத்துக்களைத் தாலிபான்கள் தெரிவித்திருந்தனர்.

ஆனால் ஆப்கான் மக்கள் எதற்கு அஞ்சினார்களோ அதெல்லாம் தற்போது நடந்து வருகிறது. பெண்கள் வேலைக்கு வரத் தடை, இசை, சினிமா என எதுவும் இருக்கக் கூடாது எனத் தடை விதித்த தாலிபான்கள், தற்போது கிரிக்கெட் மீதும் கை வைத்துள்ளார்கள்.

கடந்த 20 ஆண்டுகளாக தாலிபான்களின் தலையீடு இல்லாததால் கொஞ்சம், கொஞ்சமாக அங்கு கிரிக்கெட் வளர்ந்து வந்தது. அவர்களின் கடுமையான உழைப்பால் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்குச் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் அங்கீகாரம் கிடைத்தது. அதோடு ஆப்கான் கிரிக்கெட் அணி இந்தியாவோடு தங்களின் முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்று புதிய வரலாற்றை எழுதினார்கள். ஆனால் தற்போது எல்லாம் தலைகீழாக மாறியுள்ளது.

ஐபிஎல் போட்டிகளைப் பார்க்கக் கூடாது என தடை விதித்த தாலிபான்கள், வரும் காலத்தில் எந்த வகையில் விளையாட்டுப் போட்டிகளுக்கு ஆதரவளிக்கப் போகிறார்கள் என்பது தான் கிரிக்கெட் ரசிகர்களின் கேள்வியாக உள்ளது. அதேநேரத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் விதிமுறைகளின் படி ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இனி டெஸ்ட் போட்டிகளில் விளையாட அனுமதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்