வரிசையா எல்லா மேட்சும் ஜெயிக்கிறாங்கதான்.. ஆனாலும் சிஎஸ்கேவுக்கு ஒரு ‘வீக்னஸ்’ பாயிண்ட் இருக்கு.. எச்சரிக்கை மணி அடித்த முன்னாள் வீரர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பலவீனம் குறித்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் பிரையன் லாரா கருத்து தெரித்துள்ளார்.

14-வது சீசன் ஐபிஎல் (IPL) தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 40 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளன. அதில் 10 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி 8-ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்து வருகிறது.

கடந்த 2020-ம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதனால் முதல் முறையாக ப்ளே ஆஃப் (Playoff) சுற்றுக்கு தகுதி பெறாமல் சிஎஸ்கே அணி வெளியேறியது. இது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சூழலில் நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பிரையன் லாரா (Brian Lara), சென்னை அணியின் பலவீனம் குறித்து பேசியுள்ளார். அதில், ‘சிஎஸ்கே அணி இந்த ஐபிஎல் தொடரில் நன்றாகதான் விளையாடி வருகிறது. ஆனாலும் அந்த அணியில் சில குறைபாடுகள் இருக்கதான் செய்கிறது. எங்கு குறை உள்ளது? யார் யாரெல்லாம் நன்றாக விளையாடவில்லை? என நான் வெளிப்படையாக சொல்ல விரும்பவில்லை. ஆனாலும் எது என்று உங்களுக்கே தெரியும், அதை எதிரணியினர் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’ என பிரையன் லாரா கூறியுள்ளார்.

தற்போது சென்னை அணியில் மிடில் ஆர்டர்தான் பலவீனமாக உள்ளது. குறிப்பாக மும்பைக்கு எதிரான போட்டியில், ஆரம்பமே 4 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. இதனை மும்பை அணி சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. உடனே சுதாரித்துக்கொண்ட சென்னை அணி, வேகமாக ரன்களை குவித்துவிட்டது. இதைதான் பிரையன் லாரா மறைமுகமாக கூறியுள்ளார்.

குறிப்பாக மிடில் ஆர்டரில் களமிறங்கும் கேப்டன் தோனி (Dhoni), சுரேஷ் ரெய்னா (Suresh Raina) போன்ற வீரர்கள் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். சமீபத்தில் நடந்த கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில், தோனி 1 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். இக்கட்டான சமயத்தில் அணி இருந்தபோது, தோனியின் இந்த ஆட்டம் ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. கேப்டனாக தோனி சிறப்பாக செயல்பட்டாலும், பேட்ஸ்மேனாக அவர் சொதப்பி வருவதாக பலரும் விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்