'அடேய்... இன்னுமாடா 'அத' நியாபகம் வச்சிருக்கீங்க'!.. அமீரகத்தில் மீதமுள்ள ஐபிஎல்!.. ரெய்னாவை வம்புக்கு இழுத்த ரசிகர்கள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் தொடர் மீண்டும் அமீரகத்தில் நடைபெறுகிறது என அறிவித்ததில் இருந்து சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னா ட்ரெண்டிங்கில் உள்ளார்.

கொரோனாவால் தடைபட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதுவரை 29 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், இன்னும் 31 போட்டிகள் நடைபெற வேண்டியுள்ளது.

ஐபிஎல் தொடர் பாதியில் நிறுத்தப்பட்டதால் சோகத்தில் இருந்த கிரிக்கெட் ரசிகர்கள் தற்போது உற்சாகமடைந்துள்ளார். ட்விட்டரில் மீண்டும் பழைய போட்டிகளை வைத்து அமீரகம் பிட்ச்சுகள் யாருக்கு சாதகமாக அமையும் என ஆராய்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், அதில் சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னாவின் பெயர் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. அதற்கு காரணம் கடந்த ஆண்டு நடந்த நிகழ்வு தான்.  2020 ஐபிஎல் தொடர் அமீரகத்தில் நடைபெற்ற போது சிஎஸ்கே வீரர்கள் அனைவரும் துபாய் சென்று அங்கு தனியார் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டனர்.

அப்போது சுரேஷ் ரெய்னா ஒரு போட்டியில் கூட விளையாடாமல் திடீரென தொடரில் இருந்து விலகி நாடு திரும்பினார். இதற்கு முதலில், ரெய்னா பால்கனியுடன் கூடிய அறை கேட்டதாகவும், அது கிடைக்காததால் அணி நிர்வாகத்துடன் பிரச்சினை ஏற்பட்டு வெளியேறியதாகவும் கூறப்பட்டது. பின்னர், தனிப்பட்ட காரணங்களுக்காக வெளியேறியதாக கூறப்பட்டது. 

இந்நிலையில், இந்த ஆண்டும் ஐக்கிய அரபு அமீரகத்தில் போட்டிகள் நடைபெறுவதால், நெட்டிசன்கள் மீண்டும் ரெய்னாவின் பிரச்சினையை கையில் எடுத்துள்ளனர். ட்விட்டரில், ரெய்னாவுக்கு பால்கனியுடன் கூடிய அறை கொடுத்துவிடுங்கள், ரெய்னாவுக்கு பால்கனி ஒதுக்கியாச்சா? சிஎஸ்கே முதலில் ரெய்னாவுக்கு பால்கனி அறையை புக் செய்யுங்கள் என ட்விட்டரில் மீம்களை போட்டு தள்ளுகின்றனர். 

சுரேஷ் ரெய்னா கடந்த ஆண்டு அணியில் இல்லாததே சிஎஸ்கேவின் சொதப்பலுக்கு காரணமாக பார்க்கப்பட்டது. அதே போல அவர் இந்த ஆண்டு சிஎஸ்கேவில் இணைந்திருப்பது, அணிக்கு பலம் சேர்ந்துள்ளது. இந்த தொடரில் இதுவரை 7 போட்டிகளில் ஆடியுள்ள ரெய்னா 123 ரன்களை விளாசியுள்ளார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்