'உன்னைய தான் தம்பி தேடிட்டு இருந்தேன்... எப்படிய்யா உன்னால இதெல்லாம் முடியுது'!.. இந்த ஐபிஎல் கண்டெடுத்த சூப்பர் ஹீரோ!.. ஆகாஷ் சோப்ரா நெகிழ்ச்சி!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் தொடரில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ஒரு இளம் வீரரைப் பற்றி முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா வெகுவாக பாராட்டி பேசியுள்ளார்.

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து நடத்தப்பட்டு வரும் உள்ளூர் டி20 தொடரான ஐபிஎல் தொடரின் 14வது சீசன் கடந்த மாதம் 9ம் தேதி தொடங்கியது.

மொத்தம் 60 போட்டிகள் கொண இந்த தொடரில், 29 போட்டிகள் மட்டுமே நடைபெற்றிருந்த நிலையில், கொரோனாவின் கோரத்தாண்டவம் காரணமாக எஞ்சியுள்ள போட்டிகள் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட ஒரு சில வீரர்களை தவிர மற்ற வீரர்கள் அனைவரும் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பிவிட்ட நிலையில், ஐபிஎல் தொடரில் விளையாடிய இளம் வீரர்கள் சிலர் இந்த தொடர் குறித்தான தங்களது அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர். அதே போல் முன்னாள் வீரர்கள் பலர் ஐபிஎல் தொடரில் தங்களை கவர்ந்த வீரர்கள் குறித்தும், ஒவ்வொரு அணியின் செயல்பாடுகள் குறித்தும் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், ஐபிஎல் தொடர் குறித்து தொடர்ந்து பல்வேறு விஷயங்களை பேசி வரும் முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய இளம் வீரர் சேத்தன் சக்காரியாவை வெகுவாக பாராட்டி பேசியுள்ளார்.

இது குறித்து ஆகாஷ் சோப்ரா பேசுகையில்,  "சக்காரியா நம் அனைவரையும் சர்ப்ரைஸ் செய்துவிட்டார். எவ்வளவு அருமையாக பந்துவீசுகிறார். இன்ஸ்விங், அவுட்ஸ்விங் ஆகிய இரண்டையுமே அபாரமாக வீசுகிறார். நல்ல வெரைட்டியும் வைத்துள்ளார். அடிவாங்கினாலும், தன்னம்பிக்கையுடன் அதிலிருந்து மீண்டெழுந்து அருமையாக வீசுகிறார். அவரது மனநிலை, டெக்னிக் ஆகியவையும் அருமையாக உள்ளது. இந்தியாவின் வளர்ந்துவரும் ஸ்டார் கிரிக்கெட்டர் சக்காரியா என்று ஆகாஷ் சோப்ரா புகழாரம் சூட்டியுள்ளார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் ரூ.1.2 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட இடது கை பந்துவீச்சாளரான சேத்தன் சக்காரியா, 14வது சீசனில் (நடந்தவரை) 7 போட்டிகளில் ஆடி 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வீழ்த்திய விக்கெட்டுகள் என்னவோ குறைவுதான் என்றாலும், பெரிய பெரிய வீரர்களை வீழ்த்தினார் சக்காரியா. கேஎல் ராகுல், தோனி போன்ற பெரிய வீரர்களை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்