'பிளாட்பார்ம்' வாழ்க்கை டூ கோடீஸ்வரர்... முன்னணி வீரர்களுக்கு டஃப் கொடுக்க காத்திருக்கும் 'குட்டிப்புலி'

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்த உலகத்தில் எத்தனையோ விதமான தன்னம்பிக்கை கதைகள் உள்ளன. ஒவ்வொரு துறையிலும் வறுமையை வென்று வாய்ப்புகளை பற்றி கொண்டவர்கள் குறித்த பல்வேறு தகவல்களை நாம் தாண்டி வந்திருக்கலாம். அந்த வகையில் கிரிக்கெட்டில் சாதிக்க காத்திருக்கும் இளம்வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் குறித்து இங்கே பார்க்கலாம்.

உத்தரப்பிரதேச மாநில பாதோஹியில் ஒரு சிறிய கடை வைத்திருப்பவரின் மகனான ஜெய்ஸ்வால், கிரிக்கெட் மீதான ஆர்வத்தால் சிறு வயதிலேயே மும்பைக்கு சென்றுவிட்டார். மும்பைக்கு சென்ற புதிதில் கையில் காசு இல்லாமல் மிகவும் சிரமப்பட்ட ஜெய்ஸ்வால், ஒரு கடையில்தான் படுத்து உறங்கியுள்ளார். எதிர்பாராத விதமாக அங்கிருந்து வெளியேற்றப்பட்ட ஜெய்ஸ்வால், முஸ்லீம் யுனைடெட் கிளப் ஊழியர்களுடன் ஆசாத் மைதானத்தில் படுத்து உறங்கி காலத்தை கழித்துள்ளார்.

கிரிக்கெட் மீதான ஆர்வத்தால் வீட்டைவிட்டு வந்த ஜெய்ஸ்வால் தனது வருமானத்திற்காக பானிபூரி கடையிலும், சிற்றுண்டி விடுதியிலும் வேலை பார்த்துள்ளார். அப்போது தன்னுடன் கிரிக்கெட் ஆடும் சிறுவர்கள் கடைக்கு பானிபூரி சாப்பிட வரக்கூடாது என்று வேண்டி கொள்வாராம். இவரின் பேட்டிங் திறமையை கண்ட ஜ்வாலா சிங் என்னும் பயிற்சியாளர் அவருக்கு பயிற்சி அளித்துள்ளார். மேலும் அவர் தங்குவதற்கும் இடம் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார்.

ஜ்வாலா சிங்கின் நம்பிக்கை வீண் போகவில்லை. தன்னுடைய விடாமுயற்சியால் இந்திய ஏ அணிக்காக விளையாடும் ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடித்து யார் இந்த பையன்? என அனைவரையும் கவனிக்க வைத்தார். தற்போது நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக விளையாட உள்ளார். கடந்த ஆண்டு ராஜஸ்தான் அணி இவரை 2.40 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்துள்ளது. இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலமாக கருதப்படும் இவரின் ஆட்டத்தினை பார்க்க ரசிகர்களுடன் இணைந்து முன்னணி வீரர்களும் காத்துக்கொண்டு இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்