டீம்ல இருந்து 'கேப்டன்', துணை கேப்டனெல்லாம்.. 'கழட்டி' விட்டதுக்கு.. 'இதுதான்' காரணமாமே!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுவருகின்ற டிசம்பர் 19-ம் தேதி ஐபிஎல் ஏலம் நடைபெற இருக்கிறது. அதற்கு முன்பு வீரர்கள் விடுவிப்பது, விற்பனை செய்வது ஆகியவை கடந்த 14-ம் தேதியுடன் முடிவுக்கு வந்தது. சற்றும் எதிர்பாராதவிதமாக அனைத்து அணிகளும் தங்கள் அணியில் இருந்த மிகப்பெரும் தலைகளை எல்லாம் கழட்டி விட்டுள்ளன.
இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. முதன்முறையாக அஸ்வினை பஞ்சாப் அணி டெல்லி அணிக்கு விற்பனை செய்தது. அதற்கு பதிலாக சுச்சித் என்ற உள்ளூர் வீரரை பஞ்சாப் அணி எடுத்தது. ஆனால் மிகப்பெரும் ஆச்சரியமாக ஒவ்வொரு அணியில் தங்கள் அணியில் இருந்து அனுபவமும், திறமையும் வாய்ந்த வீரர்களை கழட்டி விட்டுள்ளது.
சென்னை அணி சாம் பில்லிங்ஸை கழட்டி விட்டது. ஹைதராபாத் அணி ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன், யூசுப் பதானை கழட்டி விட்டது. ஷாகிப் தடையில் இருப்பதால் இது எதிர்பார்த்த ஒன்று தான். ஆனால் கொல்கத்தா அணியின் துணை கேப்டனாக இருந்த ராபின் உத்தப்பாவை அவரது பெர்பாமன்ஸ் சரியில்லை என்று காரணம் காட்டி கொல்கத்தா கழட்டி விட்டுள்ளது. இதேபோல நல்ல பார்மில் இருந்த ஓபனிங் பேட்ஸ்மேன் கிறிஸ் லின்னை அந்த அணி ஏன் கழட்டி விட்டது என தெரியவில்லை.
பெங்களூருக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. உலகின் அபாயகரமான பவுலர் என புகழப்படும் டேல் ஸ்டெயினை தங்களது அணியில் இருந்து கழட்டி விட்டுள்ளது. நீண்ட காலமாக பஞ்சாப் அணிக்காக ஆடிவந்த டேவிட் மில்லரை அந்த அணி அதிரடியாக கழட்டி விட்டுள்ளது. இதேபோல அதிக தொகைக்கு எடுக்கப்பட்ட ஜெயதேவ் உனத்கட்டையும், அணியின் தூணாகவும்-முன்னாள் கேப்டனாகவும் திகழ்ந்த ரஹானேவையும் ராஜஸ்தான் அணி கழட்டி விட்டுள்ளது.
இதேபோல கொல்கத்தா அணியில் இருந்து பியூஸ் சாவ்லா, ராஜஸ்தான் அணியில் இருந்து ராகுல் திருப்பதி, மும்பை அணியில் இருந்து யுவராஜ் சிங், நல்ல பார்மில் இருந்த பவுலர் அல்ஜாரி ஜோசப் ஆகியோரையும் அந்த அணிகள் விடுவித்துள்ளன. அதிக தொகைக்கு எடுக்கப்பட்ட வீரர்கள் சரியாக விளையாடாததால் அவர்களை விடுவித்ததாகவும், அவர்களை விடுவித்ததால் தங்களிடம் ஏலத்தொகை அதிகம் உள்ளதாகவும் இதுகுறித்து ஐபிஎல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.
மேலும் இளம்வீரர்களை எடுத்து வெற்றிப்பாதைக்கு அழைத்துச்செல்ல தாங்கள் விரும்புவதாகவும் அணியின் பயிற்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். குறிப்பாக இதுவரை கப்பை வெல்லாத டெல்லி, பெங்களூர், பஞ்சாப் அணிகள் இந்தமுறை கப்பை வென்றே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் களமிறங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..!
- ‘முன்னாடி கூட பாக்காம’.. ‘வேற மாதிரி’ பந்துவீச்சால் வியப்பில் அழ்த்தும் இளம்வீரர்.. ‘வைரலாகும் வீடியோ’..
- ஓவர் ஸீன்.. 'மொக்கை' டீமுக்கு எதிரா அடிச்சதுக்கே இப்டியா?.. 'சாபம்' கொடுக்கும் ரசிகர்கள்!
- மாசா மாசம் 'ரெண்டு' சதம் அடிக்குற.. இந்த 'கொழந்தை' யாருன்னு கண்டுபுடிங்க?
- ‘அவர் அத சொல்லலன்னா அவுட் ஆகிருக்க மாட்டேன்’.. தோனி மீது ‘பழிசுமத்திய’ பிரபல இந்திய வீரர்..
- இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..!
- Video 'சொந்த' தம்பியால் 'ரத்தம்' சொட்டச்சொட்ட.. மைதானத்தை விட்டு 'வெளியேறிய' வீரர்!
- ‘எந்த டீம் கிட்ட எவ்வளவு ஏலத்தொகை இருக்கு?’.. ‘இன்னும் எத்தனை பேரை எடுக்க முடியும்?’.. ‘முழுவிவரம் உள்ளே’..
- 'சென்னை' முதல் டெல்லி வரை.. எந்த டீம்ல யாரை 'தூக்கி' இருக்காங்க?.. முழுவிவரம் உள்ளே!
- ‘உலகக் கோப்பைக்குப் பிறகு’.. ‘பயிற்சியைத் தொடங்கிய தோனி’.. ‘வெஸ்ட் இண்டீஸ் தொடரில் பங்கேற்கிறாரா?’..