Video: பெரிய தலைகளை தட்டித் தூக்கிய 'தமிழக' வீரர்கள்... விதவிதமான ஸ்கெட்சுகளால் 'ஆட்டம்' காணும் கேப்டன்கள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நடப்பு ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகின்றன. அனைத்து அணிகளும் சமபலத்துடன் திகழ்வதால் இந்த ஆண்டு போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக தமிழக வீரர்கள் முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தி வருகின்றனர்.

சில நாட்களுக்கு முன் பெங்களூர் அணியுடன் ஹைதராபாத் அணி மோதியது. இதில் தமிழகத்தை சேர்ந்த டி.நடராஜனுக்கு வார்னர் வாய்ப்பு அளித்தார். கொடுத்த வாய்ப்பை நடராஜன் கெட்டியாக பிடித்து கொண்டார் என்று தான் கூற வேண்டும். முதல் போட்டியில் பெங்களூர் அணியின் கேப்டனும், உலகின் நம்பர் 1 வீரர் என புகழப்படுபவருமான விராட் கோலியின் விக்கெட்டை கைப்பற்றி நடராஜன் இன்ப அதிர்ச்சி அளித்தார்.

அதேபோல நேற்று நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா அணியின் முக்கிய வீரரான நிதிஷ் ராணா விக்கெட்டை கைப்பற்றி தன்னுடைய வாய்ப்பை மேலும் வலுவாக்கி கொண்டுள்ளார். ஹைதராபாத் அணியின் முக்கிய வீரர்கள் பலரும் விக்கெட் எடுக்க திணறி வரும் நிலையில் நடராஜன் கவனிக்க வைத்துள்ளார். இதேபோல கொல்கத்தா அணியின் வருண் சக்கரவர்த்தியும் வார்னர் விக்கெட்டை வீழ்த்தி யாருப்பா இந்த பையன்? என திரும்பி பார்க்க வைத்துள்ளார்.

தன்னுடைய திறமையால் ஐபிஎல்லில் 8.4 கோடிக்கு ஏலம் போன வருண் சக்கரவர்த்தி இடையில் பார்மின்றி தவித்தார். தற்போது வார்னர் விக்கெட்டை வீழ்த்தி மிஸ்ட்ரி ஸ்பின்னர் என்ற பெயரை தக்க வைத்துக்கொண்டு இருக்கிறார். ஏற்கனவே தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் இந்திய அணியில் பவுலராக அறிமுகமாகி ஒரு கலக்கு கலக்கினார். அதேபோல மேலும் பல தமிழக வீரர்கள் இந்திய அணியில் இடம்பிடிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக உள்ளது. இந்த ஐபிஎல் அதற்கு நல்ல வாய்ப்பினை அளிக்கும் என நம்புவோம்!

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்