'கடைசியா' அவர 3D கிளாஸ் போட வச்சுட்டீங்க... இளம்வீரரை 'வச்சு' செய்யும் ரசிகர்கள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் அம்பாதி ராயுடு புறக்கணிக்கப்பட்டு அவருக்கு பதிலாக விஜய் சங்கர் இடம் பிடித்தார். இதற்கு தேர்வுக்குழு விஜய் சங்கர் பேட்டிங், பீல்டிங், பவுலிங் என அசத்துவதால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது என தெரிவித்தது.

பதிலுக்கு ராயுடு,'' நான் உலகக்கோப்பை போட்டிகளை 3D கண்ணாடி அணிந்து பார்க்க போகிறேன் என ட்வீட் செய்தார். இது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் ஹைதராபாத்தை சேர்ந்த ராயுடு சென்னை அணிக்காகவும், தமிழகத்தை சேர்ந்த விஜய் சங்கர் ஹைதராபாத் அணிக்காகவும் ஆடி வருகின்றனர்.

சென்னை அணிக்காக முதல் போட்டியில் ஆடிய ராயுடு 71 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். இவரது பேட்டிங்கை பார்த்த அனைவரும் உலகக்கோப்பை தொடரில் அவருக்கு அநீதி இழைக்கப்பட்டது என கருத்து தெரிவித்து வருகின்றனர். அதே நேரம் விஜய் சங்கர் நேற்று நடைபெற்ற போட்டியில் பேட்டிங்கில் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார்.

பவுலிங்கில் 1 பந்துக்கு 10 ரன்கள் விட்டுக்கொடுத்து மோசமான சாதனை செய்தார். இதைப்பார்த்த ரசிகர்கள் ராயுடு-சங்கர் இருவரின் ஆட்டத்தை ஒப்பிட்டு சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக ராயுடு தற்போது 3D கண்ணாடி அணிந்து ஆட்டத்தை பார்ப்பார் என ட்வீட் செய்து வருகின்றனர். இதனால் ஐபிஎல் தொடர் தற்போது சூடு பிடித்துள்ளது. தன்மீதான ரசிகர்களின் விமர்சனங்களுக்கு அடுத்த ஆட்டத்தில் விஜய் பதிலடி கொடுப்பாரா? என காத்திருந்து பார்க்கலாம்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்