2 வருட புறக்கணிப்பு! 'வலைவிரித்த' தமிழக வீரர்... ஏமாந்து போன கேப்டன்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணியில் தமிழகத்தை சேர்ந்த விஜய் சங்கர், டி.நடராஜன் இருவரும் இடம் பிடித்தனர். இதில் விஜய் சங்கர் பேட்டிங், பவுலிங்கில் சொதப்ப நடராஜன் விராட் கோலி விக்கெட்டை வீழ்த்தி திரும்பிப்பார்க்க வைத்துள்ளார்.

2018-ம் ஆண்டு ஹைதராபாத் அணியில் வாங்கப்பட்ட நடராஜன் கடந்த 2 ஆண்டுகளாக வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வந்தார். எனினும் நம்பிக்கையை கைவிடாமல் இடைவிடாது பயிற்சி எடுத்து வந்தார். மீண்டும் கேப்டனாக பதவியேற்ற வார்னர் அணியில் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்க, நேற்றைய போட்டியில் விராட்டின் விக்கெட்டை வீழ்த்தி நடராஜன் நம்பிக்கை அளித்துள்ளார்.

பெங்களூர் அணியின் நட்சத்திர வீரரும், இந்திய அணியின் கேப்டனுமான விராட்(14) விக்கெட்டை வீழ்த்தி அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்துள்ளார். நடராஜன் தான் வீசிய 16வது ஓவரின் 5 வது பந்தை கோலியை அடிக்கத் தூண்டும் வகையில் ஆஃப் சைடில் வீசினார். வேகத்தை குறைத்து, மிடில் ஸ்டம்பில் இருந்து ஆஃப் சைடு போகும் படி அவர் வீசிய பந்தை ஏறி வந்து அடித்தார் கோலி.

அது எல்லைக்கோட்டில் இருந்த ரஷீத் கைகளில் தஞ்சம் அடைந்தது. நடராஜன் 4 ஓவர்கள் வீசி 1 விக்கெட் தான் எடுத்தார் என்றாலும், கோலியின் விக்கெட் என்பதால் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதனால் அடுத்தடுத்த போட்டிகளில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்