இதென்ன பிரமாதம்! 28 வருஷத்துக்கு முன்னாடியே இத 'அவரு' பண்ணிட்டாரு... வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நேற்று நடைபெற்ற கொல்கத்தா-ராஜஸ்தான் அணிகள் இடையிலான போட்டியில் கொல்கத்தா அணி ராஜஸ்தான் அணியை 37 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. தொடர்ந்து வெற்றிநடை போட்டுவந்த ராஜஸ்தானுக்கு இந்த வெற்றி பின்னடைவாக அமைந்து விட்டது.

இதென்ன பிரமாதம்! 28 வருஷத்துக்கு முன்னாடியே இத 'அவரு' பண்ணிட்டாரு... வைரலாகும் வீடியோ!

போட்டியின் போது ராஜஸ்தான் வீரர் சஞ்சு சாம்சன் பிடித்த கேட்ச் ஒன்று வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் எப்படி மனுஷன் விழுந்து குட்டிக்கரணம் அடிச்சு கேட்ச் பிடிச்சு இருக்கார் என அவரை பாராட்டி வருகின்றனர். சாம்சனின் இந்த கேட்சால் காஸ்ட்லி வீரர் பேட் கம்மின்ஸ் 12 ரன்களில் வெளியேறினார்.

IPL 2020: Sanju Samson's Stunning catch goes Viral

இந்த கேட்சை பார்த்த முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் 1992-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இதுபோல ஒரு கேட்சை தான் பிடித்ததாக மலரும் நினைவுகளை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார். இதைப்பார்த்த ரசிகர்கள் சும்மா இருப்பார்களா? உடனே வீடியோ தேடி எடுத்து இரண்டு கேட்சுகளையும் எடிட் செய்து புதிய வீடியோவை வெளியிட்டு விட்டனர்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்