ஒருத்தர் ரெண்டு பேர்னா பரவாயில்ல.. இறங்குன 5 பேருமே ‘அடிச்சா’ என்ன பண்ணுவாங்க பாவம்.. பஞ்சாப்பை பந்தாடிய ‘அந்த’ 5 பேர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரின் 50-வது லீக் போட்டி இன்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 185 ரன்களை எடுத்தது.

இதில் தொடக்க ஆட்டக்காரர்களாக பஞ்சாப் கேப்டன் கே.எல்.ராகுல் மற்றும் மந்தீப் சிங் களமிறங்கினர். இதில் மந்தீப் சிங் தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே அவுட்டாகி வெளியேறினார். இதனை அடுத்து களமிறங்கிய கிறிஸ் கெய்லுடன் ஜோடி சேர்ந்த கே.எல்.ராகுல் அதிரடியாக ஆடி 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதனை அடுத்து வந்த நிக்கோலஸ் பூரனுடன் ஜோடி சேர்ந்த கிறிஸ் கெய்ல் ராஜஸ்தான் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். அதேபோல் நிக்கோலஸ் பூரனும் (10 பந்துகளில் 21 ரன்கள், 3 சிக்ஸர்) தன் பங்கிற்கு சிக்ஸர்களை விளாசி தள்ளினார். இதில் கிறிஸ் கெய்ல் 62 பந்துகளில் 8 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள் விளாசி 99 ரன்களை குவித்திருந்தார். அப்போது ஜோப்ரா ஆர்சர் வீசிய கடைசி ஓவரின் 4 பந்தை எதிர்கொண்ட கெயில் எதிர்பாரதவிதமாக அவுட்டாகி ஒரு ரன்னில் சதத்தை தவறவிட்டார்.

இதனை அடுத்து பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 17.3 ஓவர்களில் 186 ரன்கள் அடித்து அபார வெற்றி பெற்றது. இதில் பேட்டிங் செய்த ராபின் உத்தப்பா (30), பென் ஸ்டோக்ஸ் (50), சஞ்சு சாம்சன் (48), ஸ்டீவ் ஸ்மித் (48), ஜோஸ் பட்லர் (22) ஆகிய அனைவருமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

பரபரப்பாக சென்றுகொண்டிருந்த போட்டியில் 18 பந்துகளில் 29 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் ராஜஸ்தான் அணி இருந்தது. அப்போது 17-வது ஓவரை முகமது ஷமி வீசினார். அந்த ஓவரில் 4 பவுண்டரிகள் உட்பட 19 ரன்களை ராஜஸ்தான் அணியின் ஸ்மித் மற்றும் பட்லர் விளாசினர். இதனால் ப்ரஷரே இல்லாமல் அடுத்த ஓவரில் ராஜஸ்தான் அணி சுலபமாக வெற்றி பெற்றது.

முகமது ஷமி இதற்கு முன் 2 ஓவர்கள் வீசி 17 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்திருந்தார். ஆனால் அடுத்து வீசிய ஒரே ஓவரில் மட்டும் 19 ரன்கள் கொடுத்தது ராஜஸ்தான் அணிக்கு திருப்பு முனையாக அமைந்தது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்