'நட்சத்திர வீரர்கள் நிறைய பேர் இருந்தும்... RCB-யால் இதுவரை கோப்பையை வெல்ல முடியாமல் போனது ஏன்'?.. RCB-இன் சொதப்பல்கள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நட்சத்திர வீரர் அதிகம் இடம்பெறும் அணிதான் கோப்பை வெல்லும் என்ற கருத்தை தற்போதுவரை பொய் என்று நிரூபித்து வருகிறது RCB.

விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணி இதுவரை சந்தித்துள்ள பின்னடைவுகளை குறித்து இந்த செய்தி தொகுப்பில் சுருக்கமாக பார்க்கலாம்.

'ஈ சாலா கப் நமதே' என்ற முழக்கத்தை முன்வைத்துக் கடந்த வருடம் களமிறங்கிப் பலத்த அடி வாங்கியது. இந்த வருடம் நிச்சயம் கோப்பை வென்றாக வேண்டும் என்பதால் பயிற்சியாளர் மட்டத்தில் பல மாற்றங்களை செய்துள்ளது. அணியின் இயக்குநராக மைக் ஹஸ்ஸன் நியமிக்கப்பட்டுள்ளார். புதிதாக அணியில் இணைந்துள்ள கிறிஸ் மோரிஸ், டெத் ஓவர்களில் சிறப்பாகப் பந்துவீசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நங்தீப் சைனி வேகத்தில் மிரட்ட வாய்ப்புள்ளதால், விராட் கோலி இந்த வருடம் கோப்பை பெற்றுக்கொடுக்க அதிக வாய்ப்பிருப்பதாகக் கருதப்படுகிறது.

2013

டேனியல் விட்டோரிக்கு பதிலாக விராட் கோலி கேப்டனாக பொறுப்பேற்றுக்கொண்டார். கிறிஸ் கெயில் சரியாக சோபிக்காத காரணத்தால் பிளே ஆஃப் சுற்றுக்குச் செல்லும் வாய்ப்பை இழந்து ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.

2014

14 போட்டிகளில் ஐந்து வெற்றிகளை மட்டுமே பதிவு செய்தது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட யுவ்ராஜ் ரன்களை குவிக்கத் தவறினார். விராட் கோலி, டிவில்லியர்ஸும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் ஏழாவது இடம் மட்டுமே கிடைத்தது.

2015

விராட் கோலி, கெயில், டிவில்லியர்ஸ் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். சஹல் 23 விக்கெட்களை கைப்பற்றி பந்து வீச்சில் அணிக்கு வலு சேர்த்தார். மூன்றாவது இடத்திற்கு முன்னேறிய அவர்கள் பிளே ஆஃப் சுற்றில் சென்னை அணியிடம் தோல்வியடைந்தனர்.

2016

கோலி தலைமையேற்ற பின், முதல்முறையாக இறுதிப் போட்டிவரை சென்றனர். சன் ரைசர்ஸ் அணியை எதிர்த்துக் கோப்பை வெல்வார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். விராட் கோலி 973 ரன்கள் குவித்து, அதிக ரன்கள் அடித்த வீரராகத் திகழ்ந்தார்.

2017

மொத்தம் மூன்று வெற்றிகள் மட்டுமே பெற்றனர். இதனால், புள்ளிப் பட்டியலில் கடைசி இடம் மட்டுமே கிடைத்தது.

2018

அணிக்கு புதிய பயிற்சியாளர்களாக ஹேரி கிறிஸ்டன், ஆஷிஸ் நெகரா நியமிக்கப்பட்டும் பலன் அளிக்கவில்லை. வழக்கம்போல் சொதப்பியதால் ஆறாவது இடம் மட்டுமே பெற முடிந்தது.

2019

ஈ சாலா கப் நமதே முழக்கத்தை முன் வைத்துக் களமிறங்கினர். 14 போட்டிகளில் 5-ல் மட்டுமே வெற்றிபெற்றது கடைசி இடத்திற்குத் தள்ளப்பட்டனர். விராட் கோலி, டிவில்லியர்ஸ் போன்ற அதிரடி வீரர்கள் இடம்பெற்றும் மோசமான தோல்வியைத் தழுவியது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்