யாரை வேணாலும் வர சொல்லுங்க... பவுலிங் யூனிட்டை 'சிதறடித்த' 2K Kid... எந்த ஊருன்னு தெரியுமா?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

துபாயில் நடைபெற்று வரும் 3-வது ஐபிஎல் போட்டியில் விராட் தலைமையிலான பெங்களூர் அணியும், வார்னர் தலைமையிலான ஹைதராபாத் அணியும் மோதி வருகின்றன. முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 163 ரன்கள் குவித்தது. இதையடுத்து 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹைதராபாத் அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது.

பெங்களூர் அணிக்கு ஓபனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கிய 20 வயது இளம்புயல் தேவ்தத் படிக்கல் ஹைதராபாத் யூனிட்டின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். 56 ரன்கள் குவித்த தேவ்தத் விஜய் சங்கரிடம் ஆட்டமிழந்து வெளியேறினார். இவரின் ஆட்டத்தை பார்த்த ரசிகர்கள் இந்திய அணிக்கு ஒரு தரமான வீரர் கிடைத்திருக்கிறார் என சமூக வலைதளங்களில் புகழ்ந்து வருகின்றனர்.

கர்நாடக அணிக்காக விளையாடி வரும் படிக்கல் கர்நாடக வீரர் கிடையாது. அவர் கேரள மாநிலத்தை சேர்ந்த எடப்பால் என்னும் ஊரை சேர்ந்தவர்  என்பது குறிப்பிடத்தக்கது. கேரளாவில் இருந்து சஞ்சு சாம்சனுக்கு அடுத்ததாக உருவாகி இருக்கும் படிக்கல் விரைவில் இந்திய அணியில் இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. பயிற்சி ஆட்டத்தில் இவரின் பேட்டிங்கை பார்த்துத்தான் கோலி இந்த வாய்ப்பை அவருக்கு அளித்துள்ளதாக கூறப்படுகிறது. 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்