ஐபிஎல் மேட்ச்சுலேயே ஒண்ணும் சாதிக்கல...!!! மோசமாக விளையாடும் இவர் எப்படி...!!! ஆஸ்திரேலியாவில விளையாடுவாரு???...

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இந்திய டெஸ்ட் அணிக்காகத் தேர்வாகியுள்ள பிரித்வி ஷா, ஐபிஎல் போட்டியில் மிக மோசமாக விளையாடி வருவதால், அடுத்துநடக்கப் போகும் ஆஸ்திரேலியாவில் அவர் எப்படி விளையாடுவார் என்கிற கேள்வி எழுந்துள்ளது.

இருபது வயது ஆன பிரித்வி ஷா இந்தியாவுக்காக 4 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். ஐபிஎல்லில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள இளம் வீரர் பிரித்வி ஷா, தற்போது நடைபெற்று 13-வது சீசனின்  நடுவில் சரியாக விளையாடாத காரணத்தால், பிரித்வி ஷாவை அணியிலிருந்து நீக்கியது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி.

//www.behindwoods.com/uploads/5fa530d41047e.jpg

இருந்தும் அவர் திறமை மீது நம்பிக்கை வைத்து மீண்டும் களத்தில் இறங்க டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியால் வாய்ப்பளிக்கப்பட்டது. எனினும் தொடர்ந்து நம்பிக்கை இல்லாமல் விளையாடி அணி நிர்வாகத்தையும், ரசிகர்களையும் வேதனைப்பட வைத்துள்ளார் பிரித்வி ஷா. இதுவரை 11 ஆட்டங்களில் விளையாடியுள்ள அவர் 272 ரன்கள் எடுத்துள்ளார். 2 அரை சதங்கள் மட்டும் எடுத்துள்ள அவர், கடைசி 8 ஆட்டங்களில் மிக மோசமாக விளையாடி உள்ளார். 

நேற்றைய ஆட்டத்தின் இரண்டாவது பந்திலேயே போல்ட் பந்துவீச்சில் டக் அவுட்டாகி ஆட்டமிழந்தார். இதனால் இவரை வைத்து என்ன செய்வது என தடுமாறி வருகிறது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி. இதுதவிர ஐபிஎல் ஆட்டங்களில் இப்படி விளையாடுபவர், ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் எப்படி விளையாடுவார் என்கிற கவலை ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

//www.behindwoods.com/uploads/5fa530d41047e.jpg

நியூஸிலாந்தில் இரு டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய பிரித்வி ஷா ஒரு அரை சதம் மட்டுமே எடுத்துள்ளார். சரியான ஃபார்மில் இல்லாததால் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் பிரித்வி ஷாவுக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த சோதனையான காலக்கட்டத்திலிருந்து எப்படி மீண்டு வரப் போகிறார் பிரித்வி ஷா என்று கிரிக்கெட் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்