'13வது ஐபிஎல் போட்டி ஒத்திவைப்பு!' .. 'கொரோனா தாக்கம் குறையாததால்' பிசிசிஐ அதிரடி!
முகப்பு > செய்திகள் > விளையாட்டு13- வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 29ம் தேதி மும்பையில் தொடங்கவிருந்ததை அடுத்து நாடு முழுவதும் கொரோனா அச்சத்தால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.
21 நாட்கள் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு, ஏப்ரல் 14ஆம் தேதி வரை தொடர்ந்த நிலையில், பின்னர் மீண்டும் அந்த ஊரடங்கு மேலும் 18 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது. முன்னதாக வெளிநாட்டினருக்கான விசா ரத்து செய்யப்பட்டதால் வெளிநாட்டு வீரர்கள் இந்தியாவுக்கும் இந்திய வீரர்கள் வெளிநாட்டுக்கும் சென்று விளையாட முடியாத சூழ்நிலை இருந்தது.
இதனை அடுத்து மத்திய அரசாங்கத்தின் அடுத்தகட்ட நிலைப்பாட்டை பொருத்து ஐபிஎல் கிரிக்கெட் நடக்குமா? நடக்காதா? என்பது தீர்மானிக்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் ஏற்கனவே கூறியிருந்தனர். இந்த நிலையில் இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் தீவிரமாகி வருவதால் மே-3-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.
இதனால் இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் ஐபிஎல் அணி உரிமையாளர்களுடன் மேற்கொண்ட ஆலோசனையை அடுத்து ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி ஒத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. ஒருவேளை அக்டோபர், நவம்பர் மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ள 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தள்ளிவைக்கப்பட்டால், அந்த சமயத்தில் ஐபிஎல் போட்டித்தொடர் நடத்தப்படலாம் என்றும் சிலர் கருத்து கூறி வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'அன்று' அமெரிக்காவுக்கு எதிராக 'தீரத்துடன்' போரிட்ட 'வியட்நாம்'... 'இன்று' கொரோனாவுக்கு எதிரான 'போரில்...' 'அமெரிக்காவுக்கு' உதவும் 'நண்பனாக களத்தில்...' 'மாறும் வரலாறு! மாறாது மனிதம்...!'
- 'அமெரிக்காவை' இருளிலிருந்து 'இவர்' காப்பாற்றுவார்... முன்னாள் 'அதிபர்' பராக் ஒபாமா 'ஆதரவு'...
- 'நீங்க மன்னர் ட்ரம்ப் இல்ல... அதிபர் ட்ரம்ப் தான்!'... கடுப்பான கவர்னர்கள்!.. லாக் டவுன் விவகாரத்தில் வலுக்கும் எதிர்ப்பு!.. ட்ரம்ப்-இன் நிலைப்பாடு 'இது' தான்!
- 'கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கிய அடுத்த நாடு!'.. கிடுகிடுவென உயர்ந்த பலி எண்ணிக்கை!.. 1 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு!
- 'கொரோனாவைக்' கொல்லும் 'புறஊதாக்கதிர் டார்ச் ...' 'மஹாராஷ்ட்ரா' மாணவர்களின் 'அசத்தல்' கண்டுபிடிப்பு... சிறந்த 'கிருமிநாசினியாக' செயல்படும் என்றும் 'விளக்கம்...'
- 'இவரு வேற என்ன ரொம்ப டார்ச்சர் பண்றாரு டா'...'சைலன்டா வடகொரியா பாத்த வேலை'...அதிர்ந்துபோன நாடுகள்!
- ‘எனக்கு கொரோனா தொற்று இல்லை’.. ‘டெஸ்ட் ரிசல்ட்ட பாருங்க’.. ஆதாரத்துடன் வெளியிட்ட அமைச்சர்..!
- '2 உலகப் போர்களையும் வென்றுவிட்டார்!'... 99 வயதில் கெத்தாக திரும்பி வந்த முன்னாள் ராணுவ அதிகாரி!.. மெய்சிலிர்க்கும் நெகிழ்ச்சி சம்பவம்!
- ஏப்ரல் 20 முதல் இந்த ‘தொழில்கள்’ எல்லாம் இயங்கும்.. மத்திய அரசு வெளியிட்ட ‘லிஸ்ட்’.. முழு விவரம் உள்ளே..!
- 'மொத்தம் 40 நாட்கள் ஊரடங்கு ஏன்?'... 'மத்திய சுகாதாரத் துறை இணை செயலாளர் விளக்கம்'!