இந்த வருஷம் 'ஐ.பி.எல்' கண்டிப்பா 'இந்தியா'வுல இல்ல... அப்புறம், எந்த நாட்டு'ல நடக்கப் போகுது? - 'லேட்டஸ்ட்' ரிப்போர்ட்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவலாக ஆரம்பித்த நிலையில், இந்தியா முழுவதும் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

தொடர்ந்து ஊரடங்கு சில தளர்வுகளுடன் அமலில் இருக்கும் நிலையில், இதன் காரணமாக ஏப்ரல் மாதம் நடைபெறவிருந்த 13 வது ஐ.பி.எல் போட்டித் தொடர் தேதி அறிவிக்கப்படாமல் தள்ளி வைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம் உட்பட பல நாடுகள் ஐ.பி.எல் தொடரை தங்களது நாட்டில் நடத்திக் கொள்ளலாம் என பிசிசிஐ-யிடம் விருப்பம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இந்தியாவில் இந்தாண்டு ஐ.பி.எல் போட்டிகள் நடைபெற வாய்ப்பில்லை என்றும், வேறு நாட்டில் வைத்து இந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டிகள் நடைபெறலாம் என பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 'தற்போதுள்ள சூழ்நிலைப்படி இந்தியாவில் ஐ.பி.எல் போட்டிகள் என்பது சாத்தியமில்லாத ஒன்று. பல நாட்டைச் சேர்ந்த வீரர்கள் இங்கு வர வேண்டி இருப்பதால் நிச்சயம் அது கடினமான ஒன்றாகவே அமையும். இலங்கை மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் ஐ.பி.எல் போட்டியை நடத்த விருப்பம் தெரிவித்துள்ள நிலையில் ஏதேனும் ஒரு நாட்டில் வைத்து அங்குள்ள சூழ்நிலையை பொறுத்து போட்டிகள் நடைபெறலாம்' என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதே போல, இந்தாண்டு டி 20 உலக கோப்பை தொடரும் தள்ளி வைக்கப்பட்டுள்ள நிலையில், ஜூலை மாதம் இறுதியில் அதற்கான அறிவிப்புகள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு, ஐ.பி.எல் போட்டிகள் நடைபெறுவது குறித்து முடிவுகள் எடுக்கப்படலாம். முன்னதாக, 2009 ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரின் அனைத்து போட்டிகளும் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றிருந்த நிலையில், 2014 ஆம் ஆண்டு முதல் ஐ.பி.எல் தொடரின் முதல் 20 போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்