'கேகேஆர் அணி விடுவித்த வீரரை’... ஆரம்ப விலைக்கே... ‘தட்டித் தூக்கிய மும்பை இந்தியன்ஸ்... என்ன காரணம்?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலிய வீரர் கிறிஸ் லின்னை மும்பை இந்தியன்ஸ் அணி 2 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது.
ஐபிஎல் 2020-க்கான வீரர்கள் ஏலம் முதன்முதலாக கொல்கத்தாவில் இன்று நடைப்பெற்று வருகிறது. இதில், மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ளன. ஏற்கனவே அந்தந்த அணிகள் வீரர்களை ரிசர்வ் செய்துள்ள நிலையில், மீதமுள்ள 73 வீரர்களுக்கான ஏலம் தற்போது நடைபெறுகிறது.
இதில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விடுவித்த, ஆஸ்திரேலிய வீரரான கிறிஸ் லின்னை 2 கோடி ரூபாய் விலையில் ஏலத்தில் எடுத்துள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் ரூ.9 .6 கோடிக்கு வாங்கப்பட்ட ஆஸ்திரேலியாவின் அதிரடி வீரர் கிறிஸ் லின், 12-வது ஐ.பி.எல். தொடரில் 13 ஆட்டங்களில் மொத்தம் 405 ரன்கள் சேர்த்து இருந்தார். இவர் ரன் வேட்டையில் கில்லாடி என்றாலும், அவரது ஆட்டம் சீராக இல்லாததால் கொல்கத்தா அணி அவரை கழற்றி விட்டது. இதனால் கிறிஸ் லின் மீண்டும் ஏலத்திற்கு வந்தார்.
ஆனால் சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த 10 ஓவர் கிரிக்கெட் லீக்கில் 30 பந்தில் 91 ரன், 33 பந்தில் 89 ரன்கள் என்று ரன்வேட்டை நடத்தி பிரமாதப்படுத்தினார் கிறிஸ் லின். தற்போது நல்ல பார்மில் இருந்ததால், முதல் வீரராக ஏலத்தில் களமிறக்கப்பட்ட கிறிஸ் லின்னை, அவரின் அடிப்படை விலை கொடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி தூக்கியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- என்ன 'வெலை' குடுத்தாவது... 'அவரை' ஏலத்துல எடுத்துருங்க... ரசிகர்கள் ரெக்வெஸ்ட்!
- இந்திய டீமோட ... ரொம்ப முக்கியமான 'பிரச்சினை' தீந்துடுச்சு போல... இளம்வீரருக்கு 'செம' பாராட்டு!
- ஐபிஎல் ஏலப்பட்டியலில் 11 'தமிழக' வீரர்கள்... 'அந்த' ஒரு வீரருக்காக... முட்டி, மோதப்போகும் அணிகள்!
- 2 வருஷம் ஆச்சு... பெருசா ஒண்ணும் 'பர்பாமென்ஸ்' இல்ல... பேசாம அவரை 'கேப்டனா' போடலாம்
- IPL ஏலத்துல... சென்னை டீமோட 'மெயின்' டார்கெட்... இவங்க 3 பேரும் தானாம்!
- ஒரே கல்லில் பல மாங்காய்கள்... ஐபிஎல்லை வைத்து... செம திட்டம் போடும் பிசிசிஐ!
- ‘கொல்கத்தா முழுக்க போராட்டம் நடக்குது’!.. ஐபிஎல் வீரர்கள் ஏலம் நடக்குமா..? பிசிசிஐ அதிகாரி அதிரடி..!
- ஏலத்துக்கு 'என்ன' பிளான் ?... ரசிகரின் கேள்விக்கு... சென்னை அணியின் 'பதில்' இதுதான்!
- 'அவர்' தான் ஐபிஎல் 'வேணாம்னு' சொல்லிட்டாரே... அப்புறம் ஏன் இப்டி?... 'குழம்பும்' ரசிகர்கள்!
- IPL 2020: ஐபிஎல் 'ஏலத்தில்' இருந்து... பிரபல வீரர் 'திடீர்' விலகல்... காரணம் இதுதான்!