Video: ‘முதல் மேட்ச், முதல் விக்கெட்’.. கெத்துக்காட்டிய ‘தல’.. யாரோட விக்கெட் தெரியுமா..?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் தோனி தனது முதல் விக்கெட்டை டைவ் அடித்து பிடித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஐபிஎல் 13-வது கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி இன்று (19.09.2020) அபுதாபியில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் ஷர்மா மற்றும் டி காக் களமிறங்கினர்.
இதில் ரோஹித் ஷர்மா 12 ரன்களின் ஆட்டமிழந்தார். இதனை அடுத்து 33 ரன்களில் டி காக் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த திவாரி மற்றும் சூர்யகுமார் யாதவ் கூட்டணி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதில் அதிகபட்சமாக திவாரி 42 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த ஹர்திக் பாண்ட்யா அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்கள் அடித்து அசத்தினார்.
இதனை அடுத்து களமிறங்கிய பொல்லார்ட் மற்றும் க்ருணல் பாண்ட்யா, லுங்கி நிகிடியின் ஓவரில், விக்கெட் கீப்பர் தோனியின் கைகளில் கேட்ச் கொடுத்து அவுட்டாகினர். இதில் க்ருணல் பாண்ட்யாவின் விக்கெட்டை எடுக்க டைவ் அடித்து தோனி அசத்தினார். இந்த சீசனில் தோனி எடுத்த முதல் விக்கெட் இதுவாகும். 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 162 ரன்களை மும்பை அணி எடுத்தது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ஆரம்பமே அமர்க்களம் தான்! ரெய்னாவுக்கு பதிலா யாரை 'எறக்கி' விட்ருக்காங்கன்னு பாருங்க!
- 'எனக்கு ஏன் அந்த சான்ஸ் குடுக்கல?'... 'மூணே வார்த்தையில'... 'தல தோனி சொன்ன பதிலால்'... 'வாயடைத்து நின்ற சிஎஸ்கே வீரர்!'...
- 'முன்னவிட இப்போதான் தோனிகிட்ட உஷாரா இருக்கணும்'... 'எச்சரிக்கை விடுத்துள்ள'... 'பிரபல வீரர் கூறும் முக்கிய காரணம்!'...
- 'பிளாட்பார்ம்' வாழ்க்கை டூ கோடீஸ்வரர்... முன்னணி வீரர்களுக்கு டஃப் கொடுக்க காத்திருக்கும் 'குட்டிப்புலி'
- 'இன்னும் 4 விக்கெட் எடுத்தா போதும்...' 'அவரோட' ரெக்கார்ட பிரேக் பண்ணிடலாம்...! - அப்புறம் பிராவோ தான் நம்பர் 1...!
- 'நட்சத்திர வீரர்கள் நிறைய பேர் இருந்தும்... RCB-யால் இதுவரை கோப்பையை வெல்ல முடியாமல் போனது ஏன்'?.. RCB-இன் சொதப்பல்கள்!
- "மத்த எல்லாத்துலயும் 'சிஎஸ்கே' தூள் கெளப்புவாங்க!!... ஆனா 'அந்த' ஒரு விஷயம் மட்டும்... 'டீம்'க்கு பெரிய சவாலா இருக்கப் போகுது,,."
- வெறும் 'தல' இல்ல... 'Golden Cap தல'!.. தோனியை கொண்டாடும் சிஎஸ்கே!.. என்ன காரணம்?
- ஐபிஎல் அணிகளின் கேப்டன்களுக்கு எவ்வளவு சம்பளம்?.. ‘அதிக சம்பளம் வாங்கும் வீரர் யார்’.. முழுவிவரம் உள்ளே..!
- IPL 2020: பாதியில் வெளியேறிய 'முன்னணி' வீரர்கள்... எந்த அணிக்கு 'பாதிப்பு' அதிகம்னு பாருங்க!