ஒருவேளை அந்த ‘மேஜிக்’ நடந்தா சிஎஸ்கே ‘ப்ளே ஆஃப்’ போக வாய்ப்பு இருக்கு.. என்னென்னு தெரியுமா..?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடரில் சென்னை அணி ப்ளே ஆஃப் செல்ல சில வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த வருட ஐபிஎல் சீசனில் இதுவரை 10 லீக் போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி 3-ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. எளிதாக வெற்றி பெற வேண்டிய பல போட்டிகளில் மோசமான ஆட்டத்தால் சென்னை தோல்வியை தழுவியது. இந்தநிலையில் நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே மிக மோசமான தோல்வியை தழுவியது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பை சென்னை அணி இழந்துள்ளது. இதுவரை விளையாடிய அனைத்து சீசனிலும் ப்ளே ஆஃப் சுற்றுவரை சிஎஸ்கே சென்றுள்ளது. அதனால் இந்த வருடமும் எப்படியாவது ப்ளே ஆஃப் சென்றுவிடாதா என சிஎஸ்கே ரசிகர்கள் ஏக்கத்துடன் காத்துள்ளனர்.
இந்த நிலையில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல சென்னைக்கு இன்னமும் சில வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. அதில் இனி விளையாட உள்ள 4 போட்டிகளிலும் சென்னை அணி வெற்றி பெற்றே ஆகவேண்டும். அதிலும் அனைத்து போட்டிகளிலும் கண்டிப்பாக அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். தற்போது அணியில் உள்ள வீரர்களை வைத்துக்கொண்டு இது சாத்தியாமா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும் புள்ளிப்பட்டியலில் உள்ள முதல் 3 இடங்களில் உள்ள டெல்லி, மும்பை மற்றும் பெங்களூரு அணிகள் இனி தாங்கள் விளையாட உள்ள அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும். அதேபோல் அடுத்தடுத்த இடங்களில் உள்ள கொல்கத்தா, ராஜஸ்தான், ஹைதராபாத், பஞ்சாப் ஆகிய அணிகள் 12 புள்ளிகளுக்கு மேல் அதிகரிக்காமல் இருக்க வேண்டும். இதுபோன்ற மேஜிக் நடந்தால் மட்டுமே சென்னை அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியும் என கூறப்படுகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- “சூரத் தனமான பார்ட்னர்ஷிப்!”.. தவிடுபொடியான சிஎஸ்கேவின் கணக்கு!.. ‘பட்லரை நெகிழ வைக்க ‘தோனி’ கொடுத்த சர்ப்ரைஸ்!
- VIDEO: 'தோனி விக்கெட்டை எடுத்தது எப்படி?.. மேட்ச் முடிஞ்சு தோனி 'இத' தான் சொன்னாரு'!.. யார்க்கர் கிங் நடராஜன் Behindwoodsக்கு பிரத்யேக பேட்டி!
- “தலனு ஒருத்தர் தான் இருக்கார்.. அவர் யார்னு எல்லாருக்கும் தெரியும்!” - 'விறுவிறுப்பாக ஜெயித்த' ஐபிஎல் அணியின் கேப்டன் புகழாரம்!
- என்னங்க ‘சூப்பர் ஓவர்’.. நேத்து மேட்ச்ல ‘டிரெண்ட்டே’ இந்த பொண்ணுதான்.. ஒருவழியா ‘யாருன்னு’ தெரிஞ்சிருச்சு..!
- யார் சார் இவங்க..? நீளமான முடி, ‘துறுதுறு’ நடவடிக்கை.. ரசிகர்களை ‘கன்ஃப்யூஸ்’ பண்ணிய அம்பயர்..!
- ‘மௌனம்’ கலைத்த ‘விஜய் சேதுபதி’! முத்தையா முரளிதரனின் ‘பரபரப்பு’ அறிக்கை வெளியான சில நிமிடங்களிலேயே.. விஜய் சேதுபதி போட்ட வைரல் ‘ட்வீட்!’
- Viral Photo : "வைரலாகும் விராட்-அனுஷ்கா போட்டோ...' 'சில் அவுட்ல பக்காவா போட்டோ எடுத்துருக்கார்...' - போட்டோகிராஃபர் யாரு தெரியுமா...?
- 'இதுக்கா உருட்டிகிட்டு இருந்தீங்க.. இந்தாங்க சிக்ஸர்!'.. ‘மாத்திரையை தூக்கி போட்டுவிட்டு.. சூப்பர் ஓவரில் ‘கேம் சேஞ்சராக’ மாறிய ‘தி பாஸ்’!
- சென்னைக்கு மட்டும் ஏன் ‘இப்டியெல்லாம்’ நடக்குது?.. ‘ரிப்போர்ட்’ வந்துருச்சு.. சிஎஸ்கே CEO சொன்ன ‘அதிகாரப்பூர்வ’ தகவல்..!
- “இந்த சீசனில் சிஎஸ்கேவின் முதல் தோல்வி இவங்களோடதான்!”.. இன்று மீண்டும் பலப்பரீட்சை! வெல்லுமா வியூகம்?