அவர நீங்க 'ப்ரீயா' விட்டாலே போதும்... 'கப்ப' ஜெயிச்சுருவாரு... கேப்டனுக்கு 'ஆதரவாக' களத்தில் குதித்த ஐபிஎல் ஓனர்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நேற்றிரவு ஐபிஎல் போட்டிகள் குறித்த அட்டவணை வெளியானது. இதைப்பார்த்து ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். முதல் போட்டியில் சென்னை-மும்பை அணிகள் மோதுவதால் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. அதேநேரம் இந்த சீசனில் கண்டிப்பாக கோப்பை வெல்ல வேண்டும் என்ற ஆர்வத்தில் பெங்களூர், டெல்லி, பஞ்சாப் அணிகள் களமிறங்கி இருக்கின்றன.

அதிலும் பெங்களூர் அணி லோகோ,பெயரை எல்லாம் மாற்றி முழு நம்பிக்கையுடன் இந்த முறை களமிறங்குகிறது. இதனால் பெங்களூர் ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர். அதற்கு ஏற்றவாறு ஏகப்பட்ட வீரர்களை பெங்களூர் அணி இந்தமுறை வளைத்து போட்டிருக்கிறது.

இந்த நிலையில் பெங்களூர் அணியின் ஓனர் விஜய் மல்லையா பெங்களூர் அணியின் புதிய லோகோ மற்றும் விராட் கோலி குறித்து ட்வீட் செய்திருக்கிறார். இதுகுறித்து அவர், '' விராட் U-19 அணியின் கேப்டனாக இருந்து நேரடியாக பெங்களூர் அணிக்கு வந்தவர். தற்போது கேப்டனாக இந்திய அணியை வழிநடத்திக் கொண்டிருக்கிறார். அவர் மிகச்சிறந்த வீரர். எனவே அவர்மீது முழு நம்பிக்கை வைத்து பொறுப்பை அவரிடமே விட்டுவிடுங்கள். பெங்களூர் ரசிகர்கள் நீண்டகாலமாக கோப்பைக்காக காத்திருக்கிறார்கள்,'' என அறிவுரை வழங்கி இருக்கிறார்.

குறிப்பாக சென்னை, மும்பை அணிகளின் கேப்டன்களுக்கு இருக்கும் சுதந்திரம் பெங்களூர் அணியில் இல்லையென விஜய் மல்லையா கருதுகிறாராம். அதனால் தான் இப்படி வெளிப்படையாக அவர் விராட்டுக்கு சப்போர்ட் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்