‘கோப்பையை வெல்லும் அணிக்கு’... ‘கிடைக்கப் போகும் பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா’???... காரணம் என்ன???
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபரபரப்பாக நடைபெற்று வந்த ஐபிஎல் போட்டியில் தற்போது நடைபெறும் இறுதிச் சுற்றில் வெல்லும் அணிக்கு எவ்வளவு பரிசுத் தொகை கிடைக்கும் என தெரியவந்துள்ளது.
கொரோனா வைரஸால் ரசிகர்கள் இன்றி ஐபிஎல் 13-வது சீசன் ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்று வந்தது. 56 லீக் கொண்ட போட்டிகள் முடிவடைந்த நிலையில், பிளே ஆஃப் போட்டிக்கு, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் டெல்லி அணிகள் தகுதி பெற்றன. பின்னர் நடைபெற்ற பிளே ஆஃப் போட்டியில் கடைசியாக இறுதிப் போட்டிக்கு டெல்லி அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் தகுதிப் பெற்றன.
ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணி ஐபிஎல் போட்டியில் 4 முறை கோப்பையை வென்ற நிலையில், 5-வது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் டெல்லியை சந்திக்கிறது. அதே நேரத்தில் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இந்த ஆட்டத்தில் மும்பையை வீழ்த்தி முதல் முறையாக கோப்பையை வெல்லும் கனவில் களமிறங்கி இருக்கிறது.
இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு எவ்வளவு பரிசுத் தொகை கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது. அதன்படி, கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.10 கோடி கிடைக்க உள்ளது. தோல்வியடைந்து இரண்டாம் இடம் கிடைக்கும் அணிக்கு ரூ. 6.25 கோடி கிடைக்கும். பிளே ஆஃப் தகுதி பெற்றுள்ள சன்ரைசர்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு தலா 4.375 கோடி கிடைக்க உள்ளது. இது கடந்த ஆண்டைவிட 50 சதவிகிதம் குறைவுதான்.
ஏனெனில் ஐக்கிய அமீரகத்தில் ஐபிஎல் போட்டி நடைபெறுவதால், இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு நஷ்டம் தான். இதனால் அதனை ஈடு செய்யும் வகையில் பரிசுத் தொகையில் பல்வேறு மாற்றங்களும், சில புதுமைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆண்டு நடந்த ஐபிஎல் சீசனில் இறுதி போட்டியை வென்ற மும்பை அணிக்கு 20 கோடி முதல் பரிசாக அளிக்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டிற்கான ஐபிஎல் சீசனில் இறுதி போட்டியை வெல்லும் அணிக்கு முதல் பரிசு ரூ.10 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் 2-ம் இடத்தை பிடிக்கும் அணிக்கு கடந்தாண்டு 12.5 கோடி பரிசுத் தொகை அளிக்கப்பட்டது. ஆனால் இந்த முறை இந்த பரிசுத் தொகை 6.25 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் போட்டியில் பங்கு பெறும் வீரர்கள் விளம்பரத்தின் மூலம் வருமானத்தை பெற பல்வேறு வழிகள் உள்ளதால், பரிசுத் தொகை குறைப்பு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என பிசிசிஐ அறிவித்திருந்தது. இந்நிலையில், திடீர் திருப்பமாக 20202 கோப்பை வென்ற மும்பை அணிக்கு ரூ.20 கோடியும், 2-ம் இடம் பிடித்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு 12,5 கோடியும் வழங்கப்பட்டது. மேலும் இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில், கேகேஆரின் பேட் கம்மின்ஸ் 15.5 கோடிக்கு அதிகளவில் ஏலம் எடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ஃபைனல் மேட்ச் ஒரு பக்கம்! ..‘அதுக்குள்ள தொடங்கும் அடுத்த ஏலம்!’.. மும்பை வீரர்களை ஸ்கெட்ச் போட்டு தூக்க ‘ஐபிஎல் டீம் திட்டம்?’
- 'கோலி பாதியிலேயே இந்தியா திரும்பிடுவார்... கேப்டன் பொறுப்பு இவருக்கு தான் கொடுக்கணும்!'.. முன்னாள் வீரர் புது கணக்கு!.. இந்திய அணியில் மீண்டும் குழப்பம்!
- “அஸ்திவாரத்தை சாய்க்குறதுக்கு ப்ளான் பி?”.. ‘பழைய பகைக்கு பதிலடி கொடுக்கும் வியூகமா?’.. ‘பரபரப்பு’ களத்தில் 'ஐபிஎல்' ஃபைனல்!
- சின்னப்பம்பட்டி to சிட்னி.. ‘யார்க்கர்’ புயல் நடராஜன் கிட்ட பேசினேன்.. திமுக தலைவரின் ‘சர்ப்ரைஸ்’ வாழ்த்து..!
- "இன்னைக்கி மட்டும் அது நடக்கணும்,,.. அவருக்குக் கண்டிப்பா பிரச்சனை தான்??!!"... சிக்கலில் 'கோலி'??... பரபரப்பு 'சம்பவம்'!!!
- ‘வாழ்த்துக்கள் நட்டு’...!!! 'உங்கள அங்க மீட் பண்றேன்’...!!! 'தமிழக வீரரை பாராட்டிய ஆஸ்திரேலிய வீரர்...!!!’
- இந்திய அணியில் ‘சேலம்’ மண்ணின் மைந்தர்.. ஜாம்பவான்களை திக்குமுக்காட வச்ச ‘யாக்கர்’.. முதல்வர் ‘அசத்தல்’ ட்வீட்..!
- “எவ்ளோ சொல்லியும் கேக்காம... தொக்கா தூக்கி கொடுத்துட்டு... இப்போ அல்லல் பட்டு நிக்குறிங்களே!”.. ஐபிஎல் அணிக்காக ஃபீல் பண்ணும் ரசிகர்கள்!
- ‘இப்டியே நீங்க’...!! ‘தன் முன்னாள் அணிக்கு’...! ‘வித்தியாசமாக வாழ்த்துக் கூறிய’...! ‘முன்னாள் அதிரடி துவக்க வீரர்’...!!!
- “அடுத்த மேட்சுக்கு டீம் ரெடி!!”.. மொத்தமா ‘நடந்த’ 7 அதிரடி மாற்றம்!! முக்கிய வீரர்கள் ‘வெளியே’!.. பிசிசிஐ எடுத்த ‘பரபரப்பு’ முடிவு!