CSK Vs RR ஆட்ட தோல்வி : "இத செஞ்சிருக்கலாம், அத செஞ்சிருக்கலாம்"... 'தோனியை துரத்தும் சர்ச்சைகள்'... 'தோல்விக்கான காரணத்தை போட்டுடைத்த கேப்டன்!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ராஜஸ்தான்  அணிக்கு எதிரான போட்டியில் தான் 7வது இடத்தில் இறங்கியதற்கான காரணத்தை தோனி விளக்கியுள்ளார்.

நேற்றிரவு நடந்துமுடிந்த ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் அணி 217 ரன்கள் குவிக்க, இமாலய இலக்குடன் அடுத்து களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்களில் 200 ரன்கள் எடுத்து 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த ஆண்டு 2வது போட்டியில் விளையாடியுள்ள சென்னை அணிக்கு இது முதல் தோல்வியாகும். மேலும் போட்டியின் இறுதியிலும் ஆட்டமிழக்காமல் இருந்த தோனி கடைசி ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசி ரசிகர்களுக்கு விருந்தளித்தார்.

முன்னதாக 7வது வீரராக களமிறங்கிய தோனி டுபிளஸை அடிக்கவிட்டு அவருக்கு ஒத்துழைத்தார். ஆனால் தோனி 7வது வீரராக களமிறங்கியிருக்கக் கூடாது,  3 அல்லது 4வது வீரராக விளையாடியிருக்க வேண்டுமென கிரிக்கெட் விமர்சகர்கள் கூறிவருகின்றனர். இந்நிலையில் போட்டிக்குப்பின் இதுகுறித்து பேசியுள்ள தோனி, "நான் நீண்ட காலமாக பேட்டிங் செய்யவில்லை. 14 நாள் தனிமைப்படுத்துதலும் உதவவில்லை. சாமுக்கு வாய்ப்புகளை வழங்க வெவ்வேறு விஷயங்களை முயற்சிக்க விரும்பினோம். அது வேலை செய்யவில்லை என்றால் எங்கள் பலத்திற்கு செல்லலாம்.

ஃபாஃப் மிகவும் நன்றாக தகவமைத்துக்கொண்டார். 217 ரன்களை விரட்டுவதற்கு எங்களுக்கு ஒரு நல்ல தொடக்கம் தேவையாக இருந்தது. ஆனால் அது அப்படி நடக்கவில்லை. ஸ்டீவ் மற்றும் சாம்சன் சிறப்பாக பேட்டிங் செய்துள்ளனர். அவர்கள் பந்து வீச்சாளர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். நீங்கள் முதல் இன்னிங்ஸை பார்த்தவுடன் வீசுவதற்கான நீளம் உங்களுக்குத் தெரியும். எங்களுடைய சுழற்பந்து வீச்சாளர்கள் பந்து வீசுவதில் பிழை செய்துவிட்டனர். அவர்களை 200 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியிருக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்