10 வருஷ 'பந்தம்' எல்லாம் முடிஞ்சு போச்சு... இனிமே 'அவர' டீம்ல பாக்க முடியாது?... கலங்கும் ரசிகர்கள் என்ன நடந்தது?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரை ஆவலுடன் எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஐபிஎல் அணிகளில் அடுத்தடுத்து நிகழும் மாற்றங்கள் அவ்வளவு உவப்பாக இல்லை. முக்கியமாக சென்னை அணியின் முக்கிய வீரர்களான சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் இருவரும் அடுத்தடுத்து விலகினர். இதில் ரெய்னாவின் விலகல் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தனக்கு கொடுக்கப்பட்ட ரூமில் சரியான வசதிகள் இல்லை என ரெய்னா வருத்தம் கொண்டதாக தகவல்கள் வெளியாகின. மேலும் தோனிக்கும் அவருக்கும் நடுவில் லேசாக உரசல் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் சென்னை அணியோ, சுரேஷ் ரெய்னாவோ இதுகுறித்து எந்தவொரு விளக்கமும் அளிக்கவில்லை. அந்த நேரத்தில் ரெய்னாவின் உறவினர்கள் கொலை செய்யப்பட்டதால் தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் இந்தியா திரும்பி வந்ததாக கூறப்பட்டது.

ரெய்னா, ஹர்பஜன் இருவருக்கும் மாற்று வீரர்களை அறிவிக்காமல் சென்னை அணி ஐபிஎல் விளையாட களமிறங்கியது. முதல் போட்டியில் ஜெயித்த சென்னை அணி அடுத்து வந்த 2 போட்டிகளில் தோல்வியை தழுவ ரெய்னாவை மீண்டும் டீமுக்கு கூப்பிட வேண்டும் எனரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்தனர். குறிப்பாக டெல்லி அணிக்கு எதிரான தோல்வி ரசிகர்களை அதிர வைத்தது. இதனால் சின்ன தல மீண்டும் வர வேண்டும் என கடும் கோரிக்கைகள் எழுந்தன.

இதற்கு பதிலளித்த சென்னை அணியின் சி.ஈ.ஓ காசி விஸ்வநாதன்,'' ரெய்னா இனி அணிக்குள் வர மாட்டார். என்ன செய்ய வேண்டும் என்பது வீரர்களுக்கு தெரியும். அவரின் தனிப்பட்ட உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கிறோம்,'' என தெரிவித்தார். இதைப்பார்த்த சென்னை ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ரெய்னா போல ஒரு வீரர் அணிக்கு வேண்டும் என ரசிகர்கள் பிடிவாதம் பிடித்தனர். இந்த நிலையில் ரெய்னா இனி அணியில் இடம்பெற மாட்டார் என கூறும்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது.

இந்த நிலையில் தற்போது சுரேஷ் ரெய்னா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சென்னை அணியை அன்பாலோ செய்திருப்பதாகவும், இதேபோல சென்னை அணி பின்தொடரும் கணக்குகளில் சுரேஷ் ரெய்னா இல்லை என்றும் ஒரு செய்தி பரவி வந்த நிலையில், அதில் தற்போது உண்மையில்லை என தெரிய வந்துள்ளது. மேலும், இது தொடர்பாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்