சிஎஸ்கே தோற்க ‘ஒரே காரணம்’ இதுதான்..? லட்டு மாதிரி கெடச்ச 4 வாய்ப்பை ‘மிஸ்’ பண்ணிட்டீங்களே..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்ததற்கு முக்கிய காரணமாக பீல்டிங்கில் சொதப்பியதுதான் என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

ஐபிஎல் தொடரின் 34-வது லீக் போட்டி இன்று (17.10.2020) ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 179 ரன்களை எடுத்தது.

இதனை அடுத்து 180 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய டெல்லி அணி 19.5 ஓவர்களில் 185 ரன்கள் அடித்து அபார வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக ஷிகர் தவான் 101 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கடைசியாக களமிறங்கிய அக்‌ஷர் பட்டேல் 5 பந்துகளில் 21 ரன்கள் அடித்து டெல்லி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.

இந்தநிலையில் இப்போட்டியில் சென்னை அணியின் தோல்விக்கு முக்கிய காரணம் பீல்டிங்கில் சொதப்பியதுதான். டெல்லி அணியின் மேட்ச் வின்னரான ஷிகார் தவானின் விக்கெட்டை நான்கு முறை சிஎஸ்கே வீரர்கள் தவறவிட்டனர். ஜடேஜா வீசிய ஓவர் ஒன்றில் தீபக் சாஹர் ஒரு கேட்சை தவறவிட்டார். அந்த ஓவரின் அடுத்த பந்தே கேட்ச் ஆனது. ஆனால் அதை வாட்சன் பிடிக்க தவறிவிட்டார். இதனை அடுத்து அம்பட்டி ராயுடு, கேப்டன் தோனியும் கூட தவானின் கேட்சை தவறவிட்டார். இதனால் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த தவான் சதம் அடித்து அசத்தினார். நான்கு முறை கைக்கு வந்த வாய்ப்பை தவறவிட்டு, ஜெயிக்க வேண்டிய போட்டியை சென்னை அணி தவறவிட்டது என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்