'சிஎஸ்கே பிளே ஆப் செல்ல'... 'இது ஒன்னுதான் வழி!'... - 'மீண்டும் 'அதே' Magic-ஐ அரங்கேற்றி... சாதிப்பாங்களா சென்னை டீம்???'

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நடப்பு ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே மற்றும் பஞ்சாப் அணிகள் பிளே ஆப் செல்வதற்கான வாய்ப்புகள் அடுத்தடுத்த போட்டிகளில் குறைந்து கொண்டே செல்கிறது.

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் மிகவும் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், மும்பை எப்போதும் போலவே இந்த சீசனிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அத்துடன் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் இந்த சீசனில் முழுக்க முழுக்க இளம் வீரர்களுடன் களமிறங்கி அசத்தி வருகிறது. இதையடுத்து இந்த 2 அணிகளும் கண்டிப்பாக பிளே ஆப் செல்லும் என்பது உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் ஒரு பக்கம் கொல்கத்தா, பெங்களூரு 2 அணிகளும் சமமாக 6 போட்டிகளில் 4 போட்டிகளில் வென்றுள்ளது. இதனால் இந்த இரண்டு அணிகளும் ஐபிஎல்லில் பிளே ஆப் செல்ல அதிக வாய்ப்புள்ளது. இன்னொரு பக்கம் பஞ்சாப் அணி 7 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று, கிட்டத்தட்ட  பிளே ஆப் வாய்ப்பை இழந்துவிட்டது. இனி நடக்கும் 7 போட்டிகளிலுமே அதிக ரன் அல்லது விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் செல்வதற்கு வாய்ப்புகள் உள்ள நிலையில் பஞ்சாப் அணி இருக்கிறது.

இந்நிலையில்தான் இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள சென்னை அணிக்கும்  பிளே ஆப் செல்வதற்கான வாய்ப்பு வெகுவாக குறைந்துள்ளது. இனி சென்னை அணி பிளே ஆப் செல்ல வேண்டும் என்றால் மீதமுள்ள 7 போட்டிகளில் 5 போட்டிகளில் கண்டிப்பாக அதிக ரன் வித்தியாசத்தில் வெல்ல வேண்டும். இல்லையென்றால் குறைவான ரன் வித்தியாசத்தில் 6 போட்டிகளில் வெல்ல வேண்டும். இதுவே சிஎஸ்கே அணி பிளே ஆப் செல்வதற்கு தற்போது இருக்கும் ஒரே வழியாகும்.

ஆனால் தற்போது இருக்கும் பார்மில் பிளே ஆப் செல்வதற்கான வாய்ப்பு சிஎஸ்கேவிற்கு கிடைக்குமா என்பது பெரும் சந்தேகமாகவே உள்ளது. இருப்பினும் இந்த நிலை சிஎஸ்கேவிற்கு ஒன்றும் புதிதல்ல என்பதால் ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். கடந்த 2010ஆம் ஆண்டே ​​சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போதைய சூழலை சந்தித்துள்ளது. அந்த ஆண்டு தொடரிலும் வெறும் 2 போட்டிகளில் மட்டுமே வென்றிருந்த தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி கடைசி 7 போட்டிகளில் 5ல் வென்று பிளே ஆப்பிற்கு தகுதி பெற்று அசத்தியது இங்கு குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்