VIDEO: "இன்னைக்கு ஆட்டம் சரவெடி தான்"!.. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு... ஐக்கிய அரபு அமீரகத்தில் பிரம்மாண்ட வரவேற்பு!.. MI vs KKR முக்கிய குறிப்புகள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வரவேற்கும் வகையில் அபுதாபியின் மிக உயரமான கோபுரமான புர்ஜ் கலீஃபாவில், கேகேஆர் அணி வீரர்களின் படங்கள் ஒளிரவிடப்பட்டது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கும் ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை அணியும், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோத இருக்கின்றன. சென்னையுடனான முதல் ஆட்டத்தில் மும்பை அணி தோல்வியைத் தழுவியதால், இன்றைய போட்டியை கட்டாயம் வென்றாக வேண்டும் என்ற முனைப்பில் களம் இறங்குகிறது.

கொல்கத்தா அணிக்கும் இது முதல் ஆட்டம் என்பதால் அவ்வணியும் வெற்றியை கைப்பற்றும் முனைப்பில் களம் இறங்குகிறது. இந்நிலையில், கொல்கத்தா அணியை வரவேற்கும் வகையில், அபுதாபியின் உயர கோபுரமான புர்ஜ் கலீஃபாவில், அவ்வணி வீரர்களின் உருவப்படங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகம், "இன்று வெடிக்கப்போகும் சரவெடிக்கான முன்னோட்டம் தான் இது. நமது வழியில் நம்மை யாரும் தடுத்து நிறுத்த முடியாது. புர்ஜ் கலீஃபாவில் வீரர்களின் படங்களை ஒளிர விட்டதற்கு நன்றி. என்ன ஒரு வரவேற்பு" என்று பதிவிட்டது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் இதுவரை 25 ஐபிஎல் போட்டிகளில் மோதியிருக்கின்றன. இதில் 19 முறை மும்பை இந்தியன்ஸ் அணியும் 6 முறை மட்டுமே கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் வெற்றி பெற்றிருக்கிறது

 

 

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்