அவரை 'பெஞ்சுல' உக்கார வச்சது தான் தோத்ததுக்கு காரணம்... 'ரெண்டு' பேருக்கு நடுவுல என்ன நடக்குது?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பெங்களூர்-ஹைதராபாத் இடையிலான ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி தன்னுடைய முதல் வெற்றியை ருசித்துள்ளது. இதையடுத்து கோலி அணியினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

இந்த நிலையில் ஹைதராபாத் அணி இப்படி மோசமாக தோற்றதற்கு டேவிட் வார்னர் தான் காரணம் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். கடந்த ஆண்டு கேப்டனாக இருந்த கனே வில்லியம்சன் இன்றைய போட்டியில் இடம் பெறவில்லை. வில்லியம்சன் பார்மில் இல்லை என கூறப்பட்டாலும் வார்னர்-வில்லியம்சன் இருவருக்கும் இடையில் லேசான மோதல் இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் தான் பேர்ஸ்டோவுக்கு வாய்ப்பு அளித்த வார்னர், வில்லியம்சனை எடுக்கவில்லையாம். இதில் எந்தளவு உண்மை உள்ளது என்பது தெரியவில்லை என்றாலும் வில்லியம்சனை வெளியில் அமர வைத்தது தான் தோல்விக்கு காரணம் என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். இதனால் அடுத்த போட்டியில் வில்லியம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது. 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்