'அந்த' எடத்துல அடிபட்டா கண்டிப்பா ஜெயிச்சிருவோம்... ஆதாரம் காட்டும் ரசிகர்கள்... இது என்ன புது 'புரளியா' இருக்கு?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நேற்று நடைபெற்ற டெல்லி-ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியில் வலுவான டெல்லி அணியை வீழ்த்தி ஹைதராபாத் அணி தன்னுடைய முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. வார்னர், பேர்ஸ்டோ, வில்லியம்சன் ஆகியோரின் பேட்டிங் மற்றும் ரஷீத், புவனேஸ்வரின் துல்லியமான பந்துவீச்சு ஆகியவை ஹைதராபாத் அணிக்கு வெற்றியை தேடித்தந்துள்ளன.

போட்டியின்போது ஹைதராபாத் அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன் பேர்ஸ்டோவின் கால்களுக்கு நடுவில் பந்து தாக்கியது. எனினும் சமாளித்து அவர் தொடர்ந்து ஆடி அரைசதம் கடந்தார். ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது. நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் பெங்களூர் அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன் ஆரோன் பிஞ்ச் இதேபோல அந்த இடத்தில் அடிவாங்கி அரைசதம் கடந்தார்.

மும்பை அணிக்கு எதிராக சூப்பர் ஓவர் வரை சென்று பெங்களூர் அணி வெற்றி பெற்றது. இதைப்பார்த்த ரசிகர்கள் அந்த இடத்தில் அடிவாங்கும் பேட்ஸ்மேன் அரைசதம் கடந்து விடுகிறார் என மீம்ஸ் போட்டு அந்த ராசியை உலகத்துக்கு எடுத்துரைத்து வருகின்றனர். மேலும் சென்னை அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன் இதேபோல அடிவாங்கினால் அரைசதம் கடந்து விடலாம் என்றும் இலவச அறிவுரை வழங்கி வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்