ஐபிஎல் 'ஏலத்தில்'... விலைபோகாத 'நோட்புக்' வீரர்... என்ன காரணம்?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசமீபத்தில் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதல் டி20 போட்டி ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. போட்டியின்போது வெஸ்ட் இண்டீஸ் பவுலர் கெஸ்ரிக் வில்லியம்ஸின் ஓவரில் சிக்ஸர் பறக்கவிட்ட கோலி, காற்றில் நோட்புக்கில் எழுதுவது போல சைகை காட்டினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.
இதுகுறித்து கோலி, ''2 வருடங்களுக்கு முன் 2017-ம் ஆண்டு ஜமைக்காவில் போட்டி நடைபெற்றது. அப்போது கெஸ்ரிக் வில்லியம்ஸ் எனது விக்கெட்டை எடுத்து விட்டு, நோட்புக்கில் குறித்து வைத்துக்கொள்ளும்படி சைகை காட்டினார். அந்த நோட்புக்கை தான் நான் இன்று அவரிடம் கொடுத்தேன்,'' என போட்டி முடிந்தபின் தெரிவித்தார்.
2-வது டி20 போட்டியில் கோலி சொற்ப ரன்களில் அவுட் ஆனார். அப்போது வில்லியம்ஸ் ஷ்ஷ் என்று சைகை காட்டினார். இதற்கு 3-வது டி20 போட்டியில் கோலி பதிலடி கொடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் பந்துகளை அடித்து நொறுக்கிய கோலி வில்லியம்ஸ் பந்தில் ஒரு மெகா சிக்ஸ் பறக்கவிட்டு அவ்ளோ தூரம் போயிடுச்சா? என்பதுபோல சைகை காட்டினார். இந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலானது.
இதனால் ஐபிஎல் ஏலத்தில் வில்லியம்ஸை எந்த அணி ஏலத்தில் எடுக்க போகிறது? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவியது. ஆனால் 50 லட்சம் அடிப்படை விலையுடன் ஏலத்தில் கலந்துகொண்ட வில்லியம்ஸை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை. காட்ரல், ஹெட்மெயர் போன்ற வீரர்களை ஏலத்தில் எடுத்ததாலும் பிராவோ, பொல்லார்டு, சுனில் நரைன், கெயில்,ஆண்ட்ரூ ரஸல் என ஏகப்பட்ட வீரர்கள் ஏற்கனவே ஐபிஎல் அணிகளில் இடம்பெற்று இருப்பதும் வில்லியம்ஸ் ஏலம் போகாமல் இருந்ததற்கு காரணமாக கூறப்படுகிறது.
வில்லியம்ஸ் ஏலம் போகாதது வருத்தமாக இருப்பதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- சென்னை அணி வீரர்களின் 'சம்பள' விவரம்... தோனிக்கு 'அடுத்த' எடத்துல... யாரு இருக்கான்னு பாருங்க!
- ‘என்சிஏ மூலம்தான் அணிக்கு வரணும்’!.. ‘பும்ராவை திருப்பி அனுப்பிய டிராவிட்’!
- 14 வயசு தான்... 22 பவுண்டரிகளுடன் 'டபுள்' செஞ்சுரி... யாரோட பையன்னு தெரியுதா?
- அந்த ஆல்-ரவுண்டருக்கு 'இத்தனை' கோடியா?... என்ன ஒரு 'முட்டாள்தனம்'... பெங்களூர் அணிமீது காட்டம்!
- அந்த பையன் அவ்ளோ 'வொர்த்' இல்ல... பிரபல அணியை... கடுமையாக 'விமர்சித்த' முன்னாள் கேப்டன்!
- ‘புதுசா 4 ப்ளேயர்’!.. இந்த தடவ ‘தல’ தலைமையில் யார் யாரெல்லாம் விளையாட போறாங்கனு தெரியுமா..?
- ‘எப்படியும் என் பவுலிங்க நீங்க சந்திச்சே ஆகணும்’!.. பிரபல வீரருக்கு கலக்கல் பதிலளித்த பும்ரா..!
- இந்த 4 பேரும் 'சின்னப் பசங்க' தான்... ஆனாலும் 'கோடிகளை' கொடுத்து... வாங்கிய 'ஐபிஎல்' அணிகள்... ஓவர் நைட்டில் அடித்தது 'ஜாக்பாட்'!
- திடீரென 'கேப்டனை' அறிவித்த பிரபல அணி... மத்த டீம் 'கேப்டன்'களோட நிலை என்ன?
- அவர ஏன் 'டீமில' எடுத்தீங்கனு... எங்களுக்கு தெரியும்... 'சிஎஸ்கே'வை கலாய்த்து... போட்டோ ஷேர் செய்த 'கொல்கத்தா'!