‘விலை’ போகாத ‘பிரபல’ இந்திய வீரர்கள்... கோடிகளை ‘கொட்டி’... ‘வெளிநாட்டு’ வீரர்களை வாங்கிய அணிகள்...

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது.

ஹைதராபாத்தில் நடந்து வரும் ஐபிஎல் 2020க்கான ஏலத்தில் 8 அணிகள் பங்கேற்றுள்ளன. இதுவரை அதிகபட்சமாக ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் ரூ 15.50 கோடிக்கு கொல்கத்தா அணியால் ஏலம் எடுக்கப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபோல வெளிநாட்டு வீரர்கள் பல நல்ல விலைக்கு ஏலம் போயுள்ள நிலையில் இந்திய வீரர்கள் பலர் ஏலம் போகவில்லை.

குறிப்பாக இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ள ஹனுமா விஹாரி, சத்தீஸ்வர் புஜாரா ஆகியோர் ஏலம் போகவில்லை. அத்துடன் இந்திய வீரர்களான யூசப் பதான், ஸ்டுவர்ட் பின்னி ஆகியோரும் ஏலம் போகவில்லை.

அதேவேளையில் பேட் கம்மின்ஸ் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ரூ 15.5 கோடி), மேக்ஸ்வெல் (கிங்ஸ் லெவன் பஞ்சாப் - ரூ 10.75 கோடி), கிறிஸ் மோரிஸ் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - ரூ 10 கோடி), சாம் கர்ரன் (சென்னை சூப்பர் கிங்ஸ் - ரூ 5.50 கோடி), இயன் மார்கன் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ரூ 5.25 கோடி) போன்ற வெளி நாட்டு வீரர்கள் அதிக விலைக்கு ஏலம் போயுள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்