'ஐபிஎல் போட்டியில்'... 'சில அதிரடி மாற்றங்கள்'... 'ஃபைனல் மேட்ச் எங்கே?... 'அனைத்தையும் தெரிவித்த கங்குலி'!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்ப்பது உள்ளூர் போட்டியான ஐபிஎல் டி20. இந்தப் போட்டி எப்போது நடைபெறும் என்று ரசிகர்கள் ஆவலாக காத்திருப்பார்கள்.
இந்நிலையில், ஐபிஎல் நிர்வாகக் குழுக் கூட்டம் டெல்லியில் இன்று நடந்தது. இந்த கூட்டத்துக்குப்பின் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, இந்த கூட்டத்தில் ஐபிஎல் போட்டிகளை இரவு 8 மணிக்கு பதிலாக அரைமணி நேரம் முன்னதாக 7.30 மணிக்கே துவங்குவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. ஆனால், வழக்கம் போல் மாலை 4 மணிக்கும், இரவு 8 மணிக்கும்தான் போட்டி தொடங்கும்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 29-ல் துவங்கி, மே 24 வரை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர, உலகின் மிகப்பெரிய மைதானமாக அஹமாதாபாத்தில் தயாராகும் மைதானத்தில் இறுதிப் போட்டி நடத்தப்படும் என கூறப்பட்ட நிலையில், தற்போது மும்பையில் நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறை ஐபிஎல் போட்டியில் புதிய விதிமுறைகள் அறிமுகமாகின்றன. நோ-பாலுக்கு மூன்றாவது நடுவரை அணுகும் முறை அறிமுகமாகிறது.
அதேபோல டெஸ்ட் போட்டியில் இருப்பது போன்று கன்கஸன் மாற்று வீரரைக் களமிறக்கும் முறை அறிமுகமாகிறது. அதாவது ஒரு வீரருக்குக் காயம் ஏற்பட்டு விளையாட முடியாமல் போனால், அவருக்குப் பதிலாக மற்றொரு வீரரைக் களமிறக்கி விளையாட வைக்கலாம். மேலும் ஹர்திக் பாண்டியா குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, ‘அவரின் உடல்நிலை முழுமையாகக் குணமடையவில்லை. அவர் தேசிய கிரிக்கெட் அகாடெமியில் தங்கி இருக்கிறார். அவர் குணமடைந்து விளையாடுவதற்குச் சிறிது காலமாகும்’ என்றார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'அந்த' விஷயத்துல நீ 'சரி' கெடையாதுன்னு... என் மொகத்துக்கு 'நேராவே' சொன்னாரு... 'முச்சதம்' அடித்த இளம்வீரரின் வேதனை!
- 'இவங்கள்ல யாரு?'... 'டி20 உலகக் கோப்பை விக்கெட் கீப்பர்'... 'கங்குலி சொன்ன அதிரடி பதில்'!
- 'ஐபிஎல் தொடருக்குப் பின் தோனி விளையாடுவாரா?'... 'ரவி சாஸ்திரியின் பரபரப்பு பதில்!'...
- Video: அன்னைக்கு 'அழ' வச்சதுக்கு... இன்னைக்கு தாவிப்புடிச்சு 'பழிதீர்த்துக்' கொண்ட ஹிட்மேன்... செம வீடியோ!
- இப்டி செஞ்சா 'எப்டி' வெளையாடுறது?... 'கேள்வி' கேட்ட கேப்டன்... 'அப்பவே' சொல்லிருக்கலாமே பிசிசிஐ காட்டம்!
- ஆமா! அவர எப்பத்தான் 'கேப்டனா' போடுவீங்க... கேள்வி கேட்ட ரசிகருக்கு... செம 'பதிலடி' கொடுத்த சூப்பர் ஸ்டார்!
- 'அவருக்கு' பதிலா நாங்க இருக்கோம்... களத்தில் 'குதித்த' இளம்வீரர்கள்... 'உலகக்கோப்பை' தோல்விக்கு பழிதீர்க்குமா கோலி படை?
- 'ஏன் தோனி, தோனின்னு இருக்கீங்க'... 'அவர் இடத்துக்கு ஒருத்தர் வந்தாச்சு'... கொளுத்தி போட்ட பிரபல வீரர்!
- விளையாட்டு ஆலோசனைக் குழுவில் சேர்க்கப்பட்ட... முன்னாள் கேப்டன் மற்றும் சிஎஸ்கே வீரர்... விடுவிக்கப்பட்ட கிரிக்கெட் ஜாம்பவான்!
- இருக்குறதுலேயே 'கம்மி' சம்பளம்... இந்த டீம் 'கேப்டனுக்கு' தான்... எவ்வளவுன்னு தெரிஞ்சா கண்டிப்பா 'ஷாக்' ஆவீங்க!