‘தல’க்கு சர்ப்ரைஸ் கிப்ட் கொடுத்து ஆச்சரியப்படுத்திய சாக்‌ஷி தோனி.. வைரலாகும் போட்டோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சென்னை அணியின் கேப்டன் தோனிக்கு அவரது மனைவி சர்ப்ரைஸ் கிப்ட் கொடுத்து ஆச்சரியபடுத்தியுள்ளார்.

தோனி தலைமையிலாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை மூன்று முறை ஐபிஎல் கோப்பையை வென்று சாதனை படைந்துள்ளது. இரண்டு வருட தடைக்கு பிறகு கடந்த வருடம் நடந்த ஐபிஎல் தொடரில் களம் கண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் கோப்பையை வென்று அசத்தியது.

இதனை அடுத்து நடைபெற்று வரும் ஐபிஎல் டி20 லீக்கின் 12 -வது சீசனிலும் சென்னை அணி கலக்கி வருகிறது. இதுவரை விளையாடிய 11 போட்டிகளில் 8 -ல் வெற்றி பெற்று 16 புள்ளிகளுடன் சென்னை அணி முதல் இடத்தில் இருந்து வருகிறது.

இதில் சென்னை அணியின் கேப்டன் தோனி 100 போட்டிகளுக்கு மேல் அணியை வெற்றி பெற செய்த கேப்டன் என்ற சாதனையை படைத்துள்ளார். இதனை கொண்டாடும் விதமாக தோனியின் மனைவி சாக்‌ஷி தோனி 100 விசில்கள் அடங்கிய ஒரு நினைவு  பரிசை வழங்கிய ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

IPL, IPL2019, WHISTLEPODU, CSK, YELLOVE, MSDHONI, SAKSHIDHONI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்