‘சீண்டிய பஞ்சாப்பை சின்னா பின்னமாக்கிய மும்பை’.. ராகுல் சதத்தை காலி செய்த பொல்லார்ட்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபொல்லார்ட்டின் அதிரடி ஆட்டத்தால் மும்பை அணி அபார வெற்றி பெற்றது.
ஐபிஎல் டி20 லீக்கின் 24 -வது போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. பயிற்சியின் போது எதிர்பாராத விதமாக ரோகித் ஷர்மாவுக்கு காயம் ஏற்பட்டதால் இந்த போட்டியில் அவர் விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக பொல்லார்ட் கேப்டனாக இருந்து மும்பை அணியை வழி நடத்தினார்.
இதில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்த பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கே.எல்.ராகுல் மற்றும் கிறிஸ் கெய்ல் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆட ஆரம்பித்தனர். இதில் கிறிஸ் கெய்ல் 63 ரன்களும், கே.எல்.ராகுல் 100 ரன்களும் எடுத்து அசத்தினர். இதனை அடுத்து 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் எடுத்தது.
இதனைத் தொடர்ந்து 198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி விளையாடியது. பரபரப்பான ஆட்டத்தின் முடிவில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது. இதில் மும்பை அணியின் கேப்டன் பொல்லார்ட் அதிரடியாக ஆடி 83 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘சென்னையில மட்டும் இல்ல.. ஜெய்ப்பூரிலும் கிங்குதான்’.. ‘தோனி.. தோனி..’ காதைக் கிழித்த ரசிகர்களின் ஆரவாரம்!
- ‘உலகக் கோப்பை வர நேரம்பாத்தா இப்டி நடக்கணும்’.. பயிற்சியில் பலத்த காயமடைந்த அதிரடி வீரர்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
- ‘அதுக்கு பழகி இதுக்கு செட் ஆயிருச்சு’.. விமான நிலையத்தில், தரையில் படுத்து தூங்கும் தல!
- 'சென்னை மக்கள் இருக்காங்களே'...அப்படி என்ன 'சென்னை மக்களை' பத்தி 'தல' சொன்னாரு?
- 'பேச்சாடா பேசுன'...'கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுன'...3 நாளுல சந்திப்போம்னு சொன்னியே!
- ஒரு கேட்ச் பிடிக்கவே இப்டியா!.. ‘ஷாக் ஆன ரெய்னா’.. வைரலாகும் வீடியோ!
- சிக்ஸா?.. அதெல்லாம் ஜடேஜா கிட்ட நடக்குமா?.. மிரண்டு போன ரசல்.. வைரலாகும் வீடியோ!
- ‘இப்டி ஃபீல் பண்ண வச்சிட்டீங்களே தல’.. அவருகிட்ட இத பண்ணலாமா? .. வைரலாகும் வீடியோ!
- ‘கண்ணாலயே அட்வைஸ்’.. ‘அடுத்த பந்தில் விக்கெட்’.. வைரலாகும் ‘தல’தோனியின் வீடியோ!
- 'ஐபிஎல் இறுதி போட்டி சென்னையில் இல்லை'?...அப்போ எங்க தான் நடக்க போகுது?