‘இதுக்குப்போய் இப்டி ஃபீல் பண்ணலாமா’.. பாசமழை பொழிந்த நெட்டிசன்கள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

தான் வீசிய ஒரு ஓவரில் பெங்களூரு வீரர் அதிக ரன்கள் அடித்ததால் குல்தீப் யாதவ் மிகுந்த மன உளச்சல் அடைந்தார்.

ஐபிஎல் டி20 தொடரின் 12 -வது சீசன் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 56 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இதுவரை 34 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் 35 -வது போட்டி நேற்று(19.04.2019) கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்தது.

இதனை அடுத்து பேட்டிங் செய்த பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்தது. இதில் கேப்டன் விராட் கோலி 58 பந்துகளில் 100 ரன்களை அடித்து அதிரடி காட்டினார். மேலும் மொயின் அலி 28 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து அசத்தினார். இதனைத் தொடர்ந்து 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய கொல்கத்தா அணி 20 ஓவர்களின் முடிவில் 203 ரன்கள் எடுத்து நூழிலையில் வெற்றி வாய்ப்பை தவறவிட்டது.

இப்போட்டியில் பெங்களூரு அணியின் இன்னிங்ஸின் போது கொல்கத்தா வீரர் குல்தீப் யாதவ் 16-வது ஓவரை குல்தீப் வீசினார். அந்த ஓவரில் பெங்களூரு வீரர் மொயீன் அலி, 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் உட்பட 27 ரன்களைக் குவித்தார். ஆனாலும் ஓவரின் கடைசிப் பந்தில் மொயீன் அலியின் விக்கெட்டை குல்தீப் வீழ்த்தினார். இருப்பினும் தனது ஓவரில் 27 ரன்கள் விட்டுக்கொடுத்ததால் குல்தீப் யாதவ், மிகவும் வருத்தப்பட்டார்.

IPL, IPL2019, KKRHAITAIYAAR, KULDEEPYADAV

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்