‘இது மட்டும் நடந்தா ஆர்சிபி ப்ளே ஆஃப் போக வாய்ப்பு இருக்கு’.. ரசிகர்களின் எதிர்பார்ப்பு நடக்குமா?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இனி வரும் போட்டிகளில் பெங்களூரு அணிக்கு சாதகமாக நடந்தால் ப்ளே ஆஃப் செல்ல வாய்ப்பு உள்ளது.

ஐபிஎல் டி20 லீக்கின் 12 -வது சீசன் பெங்களூரு அணிக்கு பெரும் பாதகமாகவே அமைந்தது. விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி இதுவரை 12 போட்டிகளில் விளையாடி 8 -ல் தோல்வியும், 4 -ல் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது.

ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடஸ் அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிட்டன. ஆனால் பெங்களூரு அணி ப்ளே ஆஃப் செல்ல வாய்ப்பு உள்ளதா என ரசிகர்கள் மத்தியில் குழப்பம் நிலவிவந்தது. ஆனால் இனி நடக்க இருக்கும் போட்டிகளில் பெங்களூரு அணிக்கு சாதகமாக பல விஷயங்கள் நடந்தால் ப்ளே ஆஃப் செல்ல வாய்ப்பு உள்ளது.

இனி வரும் போட்டிகள் எப்படி அமைய வேண்டும்:

ஏப்ரல் 30: RCB vs RR - பெங்களூரு வெற்றி பெற்றாக வேண்டும்.

மே 1: CSK vs DC - இரு அணிகளில் எது வெற்றி பெற்றாலும் பிரச்சனை இல்லை.

மே 2: MI vs SRH - மும்பை வெற்றி பெற்றாக வேண்டும்.

மே 3: KXIP vs KKR - பஞ்சாப் வெற்றி பெற்றாக வேண்டும்(குறைந்த ரன் ரேட்டில்).

மே 4: RCB vs SRH - பெங்களூரு வெற்றி பெற்றாக வேண்டும்( பெரிய ரன் ரேட்டில்).

மே 5: KXIP vs CSK - சென்னை வெற்றி பெற்றாக வேண்டும்(பெரிய ரன் ரேட்டில்).

மே 5: MI vs KKR - மும்பை வெற்றி பெற்றாக வேண்டும்.

இவை அனைத்தும் சரியாக நடந்தால் ஒருவேளை பெங்களூரு அணி ப்ளே ஆஃப் செல்ல வாய்ப்பு உள்ளது.

IPL, IPL2019, ROYALCHALLENGERSBANGALORE, VIRATKOHLI, PLAYBOLD, PLAYOFFMODE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்