கொல்கத்தாவின் அதிரடி ஆட்டத்தில் சரணடைந்த பஞ்சாப்..! ப்ளே ஆஃப் வாய்ப்பை தவறவிட்ட அஸ்வின்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கிறிஸ் லின் மற்றும் சுபமன் கில் அதிரடியால் கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது.

ஐபிஎல் டி20 லீக்கின் 52 -வது போட்டி இன்று(03.05.2019) மொகாலியில் நடைபெற்றது. இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதின.

டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து பேட்டிங் செய்ய பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கிறிஸ் கெய்ல் மற்றும் கே.எல்.ராகுல் களமிறங்கினர். இதில் கே.எல்.ராகுல் 2 ரன்னிலும், கிறிஸ் கெய்ல் 14 ரன்களிலும் அடுத்தடுத்து அவுட்டாகி அதிர்ச்சியளித்தனர்.

இதனை அடுத்து ஜோடி சேர்ந்த மய்னங் அகர்வால்(36) மற்றும் நிகோலஸ் பூரான்(55) கூட்டணி நிதானமாக ஆட ஆரம்பித்தது. இதில் மய்னங் அகர்வால் 36 ரன்கள் எடுத்திருந்த போது ரன் அவுட்டாகி வெளியேறினார். கடைசியாக களமிறங்கிய சாம் குர்ரன் 55 ரன்கள் எடுத்து அவுட்டாகமல் இருந்தார். இதனை அடுத்து 20 ஓவர்களின் முடுவில்  6 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்தது.

இதனைத் தொடர்ந்து 184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன்  கொல்கத்தா அணி 18 ஓவர்களில் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக சுபமன் கில் 65 ரன்களும், கிறிஸ் லின் 46 ரன்களும் எடுத்தனர். இதன்மூலம் ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பை கொல்கத்தா பெற்றுள்ளது.

IPL2019, IPL, KXIPVKKR, KKRHAITAIYAAR

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்