‘இங்க மட்டுமில்ல உலகமெல்லாம் நம்ம விசில் சத்தம்தான் பறக்கும்’.. மாஸ் காட்டிய சிஎஸ்கே ரசிகர்கள்.. வைரல் போட்டோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆதராவாக அமெரிக்காவில் பயிலும் மாணவர்கள் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

‘இங்க மட்டுமில்ல உலகமெல்லாம் நம்ம விசில் சத்தம்தான் பறக்கும்’.. மாஸ் காட்டிய சிஎஸ்கே ரசிகர்கள்.. வைரல் போட்டோ!

ஐபிஎல் டி20 லீக்கின் 12 -வது சீசன் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் 7 -ல் வெற்றி பெற்று 14 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.

இதுவரை நடந்த ஐபிஎல் தொடர்களில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மூன்று முறை வென்று கோப்பையை கைப்பற்றியுள்ளது. மேலும் சென்னை அணிக்கான போட்டியின் டிக்கெட்டுகள் சில நிமிடங்களில் விற்று தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது. சர்வதேச கிரிக்கெட் அணிகளுக்கு இணையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் உலகம் முழுவதும் ரசிகர்கள் நிறைந்துள்ளனர்.

இதனை நிரூபிக்கும் வகையில் அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் இருந்து சிஎஸ்கேவுக்கு ஆதரவான வசனங்கள் கூடிய பதாகைகளுடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளனர். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

CSK, IPL, IPL2019, WHISTLEPODU, YELLOVE, ANBUDEN, MSDHONI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்