அதை பத்தி இப்போ நினைச்சா கூட வலிக்குது.. கே.எல்.ராகுல் அடிக்கடி அந்த போட்டோவை அனுப்புவாரு.. கோலி உருக்கம்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் தொடர் ஒன்றில் இறுதிபோட்டி சென்று தோல்வியடைந்தது குறித்து விராட் கோலி உருக்கமாக பேசியுள்ளார்.

Advertising
>
Advertising

கோதுமை மாவில் அச்சு.. கீழ் வீட்டுக்காரருக்கு ‘ஷாக்’ கொடுத்த சென்னை ஏசி மெக்கானிக்..!

ஆர்சிபி

கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடருடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலி விலகியுள்ளார். வரும் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள ஐபிஎல் மெகா ஏலத்தின் மூலமாகவே தங்கள் அணிக்கான கேப்டனை தேர்வு செய்ய உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

விராட் கோலி

கடந்த 2013-ம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக விராட் கோலி நியமிக்கப்பட்டார். அப்போது முதல் தனக்கே உரித்தான ஆக்ரோசமான கேப்டன்ஷிப் வாயிலாக ஒவ்வொரு போட்டியிலும் அந்த அணியின் வெற்றிக்காக முழுமூச்சுடன் போராடினார். ஒவ்வொரு போட்டியிலும் பெங்களூரு அணிக்காக பேட்டிங்கிலும் மலை போல ரன்களை குவித்தார்.

ஐபிஎல் 2016

ஒரு கேப்டனாகவும், பேட்ஸ்மேனாகவும் அவருக்கு அமைந்த ஒரு மிகச்சிறந்த சீசன் என்றால் அது ஐபிஎல் 2016 தொடர்தான். அந்தத் தொடரில் விராட் கோலி பேட்டிங்கில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மொத்தம் 16 போட்டிகளில் விளையாடி 4 சதங்கள் மற்றும் 7 அரைசதங்கள் உட்பட 976 ரன்களை குவித்து கிரிக்கெட்டை உலகை திரும்பிப் பார்க்க வைத்தார். இது இன்றுவரை ஐபிஎல் வரலாற்றில் யாராலும் முறியடிக்க முடியாத சாதனையாகவே இருந்து வருகிறது. அதன் காரணமாக ஐபிஎல் 2016 தொடரின் தொடர் நாயகன் விருதை வென்றார்.

தோல்வி

ஆனால் அந்த ஆண்டு இறுதிப்போட்டி வரை சென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடன் கோப்பையை தவறவிட்டது. இதனை அடுத்து இதுபோன்ற ஒரு ஆட்டத்தை தற்போது வரை பெங்களூரு அணி வெளிப்படுத்தவே இல்லை. கடைசி வரை ஐபிஎல் கோப்பை வெல்லாத கேப்டன் என்ற விமர்சனத்துடனேயே கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகினார்.

விராட் கோலி உருக்கம்

இந்த நிலையில் ஐபிஎல் 2016 தொடர் இறுதிப்போட்டியில் அடைந்த தோல்வி பற்றி விராட் கோலி தற்போது மனம் திறந்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ‘அந்த சீசன் மிகவும் நம்ப முடியாத ஒன்றாகவே அமைந்தது. ஏனென்றால் அப்போது 3-4 வீரர்கள் ஒவ்வொரு போட்டியிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டனர். டி20 கிரிக்கெட்டில் அதுபோல அனைவரும் சிறப்பாக செயல்படுவது என்பது அரிதாகும். அதனால் சிறப்பாக செயல்பட முடியாமல் போனாலும் கூட நம்மால் வெற்றியை பெற முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு கிடைத்தது. அந்த நம்பிக்கை எங்களை விட்டு செல்லவே இல்லை.

தோல்வி வலி

ஆனாலும் அதுபோன்ற நம்பிக்கையை ஒவ்வொரு முறையும் உருவாக்குவது என்பது கடினம். அந்த சீசனில் அது இயற்கையாகவே உருவானது. அந்த தோல்வியை இப்போது நினைத்தாலும் வலிக்கிறது. வெற்றிக்கு மிக அருகில் செல்ல எங்களுக்கு வாய்ப்புகள் கிடைத்தன. அதற்காக அதிர்ஷ்டம் இல்லை என்று சொல்ல மாட்டேன். ஏனென்றால் எதிரணி அன்று சிறப்பாக செயல்பட்டிருந்தது. அதை நீங்கள் ஏற்க வேண்டும்.

திட்டம் தெளிவாக இல்லை

நாங்கள் வெற்றி பெறாததற்குக் காரணம், அந்த நெருக்கடியான தருணங்களில் தைரியமாகவோ அல்லது எங்கள் திட்டங்களில் தெளிவாகவோ இருக்கவில்லை. ரசிகர்கள் எங்களிடம் இருந்து வெற்றியை எதிர்பார்க்கிறார்கள். அதனால் நாங்கள் அவர்களை சமாளிக்க வேண்டுமே தவிர, விட்டு ஓட முடியாது’ என விராட் கோலி கூறியுள்ளார்.

கே.எல்.ராகுல்

தொடர்ந்து பேசிய அவர், ‘அந்த தோல்வி ஏற்கனவே எழுதப்பட்டுவிட்டது என நினைக்கிறேன். ஏனென்றால் பெங்களூருவில் நடந்த அந்த இறுதிப்போட்டியில் ஆரம்பம் முதலே நாங்கள் அசத்தினோம். 9 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 100 ரன்கள் எடுத்திருந்த பின்னும் தோல்வி ஏற்பட்டது. அந்தப்போட்டியின் புகைப்படத்தை இன்னும் வைத்துள்ள கே.எல்.ராகுல், அந்த தோல்வியை நினைத்தால் வலிக்கிறது என கூறுவார். ஆம், அந்த தோல்வி இன்னும் வேதனையாக உள்ளது’ என விராட் கோலி வருத்தத்துடன் கூறியுள்ளார்.

ஆர்சிபி தோல்வி

அந்த இறுதிப்போட்டியில் விராட் கோலி மற்றும் கிறிஸ் கெய்ல் ஆகியோர் ஓப்பனிங்கில் வெறும் 9 ஓவர்களில் 100 ரன்கள் எடுத்தனர். ஆனால் கடைசி 9.3 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்தது. அதனால் 20 ஓவர்கள் முடிவில் 200 ரன்களை எடுத்தது. ஆனால் வெற்றி இலக்கு 208 என்பதால், 8 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதாபாத்திடன் பெங்களூரு அணி தோல்வியை தழுவியது.

T20 World Cup: இந்தியா- பாகிஸ்தான் போட்டி.. வேற லெவலில் சாதனை செய்த ரசிகர்கள்!

IPL 2016, RCB, VIRAT KOHLI, HURTS, ஆர்சிபி, விராட் கோலி, ஐபிஎல் 2016

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்