'எனக்கு டவுட்டா இருக்குங்க...' 'அங்க ஏதாவது மெஷின் வச்சிருக்காங்களா...? எப்படி ஒவ்வொண்ணுக்கும் சூப்பர் சூப்பர் ப்ளேயர்ஸ்...! - இந்திய அணியை புகழ்ந்து தள்ளிய முன்னாள் வீரர்...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய சுற்றுபயணத்தில் இருந்து கிரிக்கெட் உலகில் மிகவும் பரபரப்பாக செயல்பட்டு வருகிறது. டி20, டெஸ்ட், ஒருநாள் போட்டி என எதுவாக இருந்தாலும் இந்திய அணியில் இருக்கும் இளம் வீரர்கள் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றனர்.
ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரை இந்தியா ஜெயிக்க முக்கியமான காரணமாக அமைந்தது ரிஷப்பந்தின் பேட்டிங், முகமது சிராஜின் பந்துவீச்சு தான். அதுமட்டுமில்லாமல் ஒருநாள் டி20, போட்டிகளில் நடராஜனின் பந்துவீச்சு ஒரு யானை பலம் போல அமைந்தது.
அதேபோல் கிரிக்கெட் உலகில் சிறந்த வீரர்களை கொண்ட ஒரு அணியாக கூறப்படும் இங்கிலாந்து அணிக்கு எதிராகவும் டெஸ்ட் தொடரிலும், டி20 தொடரிலும் இளம் வீரர்கள் இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், பிரசித் கிருஷ்ணா, ஷர்துல் தாக்கூர், குர்னல் பாண்டியா என கலக்கி வருகின்றனர்.
இதன்காரணமாகவே இந்திய இளம் வீரர்களின் செயல்பாட்டை பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் யூடியூப் ஒன்றுக்குப் பேட்டி அளித்துள்ளார். அதில், இந்திய கிரிக்கெட் அணி டி20, டெஸ்ட், ஒருநாள் போட்டி என ஒவ்வொரு பிரிவுக்கும் ஏற்ப வீரர்களை தனி தனியாக உருவாக்கும் மிஷின் ஏதேனும் வைத்திருக்கிறார்களா? என்ற சந்தேகம் கலந்து புகழ்ந்து கூறியுள்ளார்.
அதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து பேசிய இன்சமாம் உல் ஹக், 'இந்திய அணி எல்லா பிரிவுகளுக்கும் சிறந்த, திறமையான இளம் வீரர்களை தயாரித்து அனுப்பிக்கொண்டே இருக்கிறது. இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இரு அறிமுகமக வீரர்களான குர்னல் பாண்டியா, பிரசித் கிருஷ்ணா சிறப்பாக விளையாடினர்.
இப்படியே தொடந்து கொண்டிருந்தால் மூத்த வீரர்கள் பொறுப்பாக விளையாடி தங்களின் இடத்தைத் தக்கவைக்காவிட்டால், அந்த இடம் இளம் வீரர்களுக்குச் சென்றுவிடும் என்ற தெளிவான எச்சரிக்கையாக அமைந்துள்ளது.
நான் ஆஸ்திரேலியாவுக்கு எதிரானத் தொடரிலிருந்தே இந்திய அணியின் வீரர்களை கவனித்து வருகிறேன், அவர்களில் இந்திய அணியில் உள்ள இளம் வீரர்கள் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார்கள், அவர்களின் வெற்றிக்கான பங்களிப்பு இங்கிலாந்து தொடரிலும் தொடர்ந்து வருகிறது.
மூத்த வீரர்களும் வெற்றிக்கு காரணமாக இருந்தாலும், இளம் வீரர்களின் செயல்பாடு, அதிகமாகப் பேசப்பட்டது. கடந்த 6 மாதங்களாக இந்திய அணியின் செயல்பாடு தங்களின் இளம் வீரர்களால் சிறப்பாக இருந்து வருகிறது.
அதனால் தான் எனக்கு சந்தேகம் வருகிறது, இந்திய அணி ஏதேனும் மிஷின்(இயந்திரம்) வைத்திருக்கிறதா என்று. இப்படி திறமையான இளம் வீரர்களை ஒவ்வொரு பிரிவுக்கும் உருவாக்கி அனுப்பிக்கொண்டே இருக்கிறார்கள்.
இந்திய கிரிக்கெட் அணி, முதல்தரமான கிரிக்கெட்டை விளையாடி வருகிறார்கள், வலிமையான இங்கிலாந்து அணியைக்கூட எளிமையாகக் கையாள்கிறார்கள். இந்திய அணிக்கு விக்கெட் தேவையெனும்போது, முதல் போட்டியில் விளையாடிய இளம் வீரர் கிருஷ்ணா 4 விக்கெட்டுகளை வீழ்த்தியது அதிசயமான ஒன்று' என இன்சமாம் உல் ஹக் ஆச்சரியம் கலந்து பாராட்டியுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘மகனே, உன் நேரம் ஸ்டார்ட் ஆகிடுச்சு’!.. முன்பே கணித்த பாண்ட்யாவின் தந்தை.. வெளியான உருக்கமான தகவல்..!
- 'ஏற்கெனவே நெலம ரொம்ப மோசமா இருக்கு... இப்போ இது வேறயா?.. சோலி முடிஞ்ச்... இந்திய அணி காட்டுல மழை தான்'!
- 'இது இந்திய அணி இல்ல... விக்ரமன் சார் படம்'!.. குருணால் சாதனையின் போது ஹர்திக் செஞ்சத பார்த்து... மனதை உருக்கும் பின்னணி!
- 'என்னங்க சொல்றீங்க...' அடுத்த 2 மேட்ச்ல 'அவரு' இல்லையா...? 'இளம் வீரருக்கு காத்திருக்கும் வாய்ப்பு...' - அப்படின்னா ஐபிஎல் மேட்ச்ல 'அந்த' டீம் கேப்டன் யாரு...?
- ‘போட்டி ஆரம்பிச்சு 16 பால் தான் முடிஞ்சிருக்கு’!.. ‘அதுக்குள்ள இது எப்படி நடந்திருக்கும்?’.. இது என்னடா புது சர்ச்சையா இருக்கு..!
- என்னங்க ரூல்ஸ் 'இது'... ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு நியாயமா...? - இந்திய கிரிக்கெட் அணியை விளாசி தள்ளிய சேவாக்...!
- ‘அப்பா, உங்களை பெருமைப்பட வச்சிட்டேன்’!.. மேட்ச் ஜெயிச்சதும் ‘க்ருணால் பாண்ட்யா’ போட்ட உருக்கமான பதிவு..!
- 'ச்ச... நெனைச்சாலே கேவலமா இருக்கு!.. சரி பரவாயில்ல... இது ஒரு வெற்றிகரமான தோல்வி தான்'!.. விரக்தியில் உளறிய இங்கிலாந்து கேப்டன் மார்கன்!!
- VIDEO: 'வெளியானது ஐபிஎல் தீம் சாங்...' 'டான்ஸ் ஸ்டெப்லாம் தாறுமாறு...' 'போட்றா வெடிய...' - உற்சாக கொண்டாட்டத்தில் ரசிகர்கள்...!
- ‘மேட்ச்ல இல்லனா கூட தண்ணீர், கூல்டிரிங்ஸ் தூக்கிட்டு வருவார்’!.. ‘சுயநலமே இல்லாத மனுசன்’.. ஒரு வீரருக்கு மட்டும் ‘ஸ்பெஷல்’ நன்றி சொன்ன கோலி..!