ஏலத்துல பிளேயர சரியா எடுக்கலன்னு குத்தம் சொல்றீங்களே.. அன்னைக்கு அவரு போன் எடுக்கலன்னா என்ன ஆகியிருக்கும் தெரியுமா??
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகடந்த சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில், ஐபிஎல் மெகா ஏலம் பெங்களூரில் வைத்து, மிகவும் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது.
ஏலத்தில் பங்கேற்ற அணிகள், தாங்கள் ஏற்கனவே திட்டம் போட்டு தயாராகி வந்த வீரர்களை, கடும் போட்டிக்கு மத்தியிலும் சொந்தமாக்கியிருந்தது.
அவற்றுள் சில அணிகள், தாங்கள் பிளான் செய்த வீரர்களை எடுக்க முடியாமலும் போயிருந்தது. இருந்த போதும், அதற்கு மாற்றாக வேறு சில வீரர்களைத் தேர்வு செய்து, அணியை சிறப்பாக உருவாக்கியுள்ளனர்.
சரிந்து விழுந்த ஹூக்
இந்த இரண்டு நாள் ஐபிஎல் ஏலத்துக்கு மத்தியில், யாரும் எதிர்பாராத வகையிலான ஒரு சம்பவம் அரங்கேறியிருந்தது. முதல் நாள் ஏலம் நடத்தி வந்த ஹக் எட்மீட்ஸ், திடீரென மேடையில் இருந்து சரிந்து விழுந்தார். இதனால், அனைத்து அணியினரும் அதிர்ச்சி அடைந்தனர். அங்கிருந்தவர்கள், பதறியடிக்க, ஹூக்கை மீட்டவர்கள், உடனடியாக அவருக்கு சிகிச்சையை மேற்கொள்ள வழி செய்தன. இதன் காரணமாக, சுமார் 2 மணி நேரம், ஏலம் தடைபட்டது.
ரசிகர்கள் பதற்றம்
பின்னர், ஹூக்கின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. தொடர்ந்து, ஹூக்கிற்கு பதிலாக, சாரு ஷர்மா ஏலத்தினை நடத்தினார். இரண்டாம் நாளும், அவரே தொடர்ந்து நடத்த, இறுதியில் ஹூக் மீண்டும் மேடையில் தோன்றி, ஏலத்தினை முடித்து வைத்தார். இதுவரை, ஐபிஎல் ஏலத்தில் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்ததில்லை என்பதால், ஹூக்கின் நிலையை நேரலையில் கண்ட ரசிகர்களும் சற்று பதற்றம் அடைந்திருந்தனர்.
'Entry' கொடுத்த சாரு ஷர்மா
அவருக்கு பதிலாக, மாற்றாக வந்த சாரு ஷர்மாவும் மிகவும் நேர்த்தியாக ஏலத்தினைக் கையாண்டிருந்தார். இந்நிலையில், ஏலதாரருக்கு மாற்றாக, சாரு ஷர்மா அங்கு எப்படி வந்தார் என்பது பற்றி, சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியுள்ளது. பெங்களூர் பகுதியைச் சேர்ந்த சாரு ஷர்மா, ஏலம் நடைபெற்ற இடத்தில் இருந்து, அருகேயுள்ள பகுதியில் தான் வசித்து வந்துள்ளார்.
அவசர அழைப்பு
ஏலத்தின் போது, ஹூக் சரிந்து விழுந்த சமயத்தில், தனது குடும்பத்தினருடன் மதிய உணவு அருந்திக் கொண்டிருந்துள்ளார் சாரு ஷர்மா. ஐபிஎல் நிர்வாக தலைவரான பிரிஜேஷ் படேல், உடனடியாக சாரு ஷர்மாவை தொடர்பு கொண்டுள்ளார். இப்போது எங்க இருக்கிறாய் என பிரிஜேஷ் கேட்க, வீட்டில் உணவருந்திக் கொண்டு இருப்பதாக சாரு தெரிவித்துள்ளார்.
உடனடியாக வர வேண்டும்
தொடர்ந்து, எலதாரர் ஹூக்கிற்கு நடந்தது பற்றி,பிரிஜேஷ் சொல்ல, அதிர்ச்சி அடைந்துள்ளார் சாரு ஷர்மா. மேலும், அவருக்கு மாற்றாக நீங்கள் வர வேண்டும் என்றும், பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார். உடனடியாக வர வேண்டும் என்பதால், சாருவும் ஒரு நிமிடம் பதற்றம் அடைய, ஏதாவது ஒரு கோட் ஷூட்டை போட்டு விட்டு, உடனடியாக ஏலம் நடக்கும் இடத்திற்கு, சாருவை பிரிஜேஷ் வரச் சொல்லியுள்ளார்.
பட்டையைக் கிளப்பிய சாரு
மறுகணமே, தயாராகிக் கொண்டு, வேகம் பிடித்த சாரு ஷர்மா, ஏலம் நடக்கும் ஹோட்டலுக்கு விரைவில் சென்று சேர்ந்தார். அங்கு, தான் தயாராக அதிகம் நேரம் எடுத்துக் கொள்ளாதவர், 15 நிமிடத்தில் தன்னை ஏலத்திற்காக தயார்படுத்திக் கொண்டு, ஏலதாரராக பட்டையைக் கிளப்பினார். ஹூக்கைப் போலவே, தன்னுடைய பேச்சில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி அசத்தியிருந்தார்.
சாரு ஷர்மா ஒரு வழக்கமான ஏலதாரர் தான். பல லீக்களுக்கு வேண்டி, நிறைய ஏலங்களை நடத்தியுள்ளார். விளையாட்டு மட்டும் இல்லாமல், கலைப் பொருட்கள் ஏலமும் நடத்தி பழக்கமுள்ளவர் சாரு ஷர்மா. ஐபிஎல் போன்ற ஏலங்களை முதல் முறையாக அவர் நடத்தினாலும், அதனைச் சிறப்பாக செய்து முடித்துள்ளார்.
விளையாட்டு வர்ணனை
புரோ கபடி லீக்கின் இயக்குனர் சாரு சர்மா, விளையாட்டு வர்ணனை மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஆகியவற்றை நடத்தி புகழ் பெற்றவர். 2003 ஆம் ஆண்டு, ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை நிகழ்ச்சிகளை நடிகை மந்திரா பேடியுடன் தொகுத்து வழங்கியது மூலம், சாரு ஷர்மா அதிகம் பிரபலம் ஆனார். கடந்த காலங்களில் ஐபிஎல்லில் நிர்வாகப் பொறுப்பிலும் சாரு ஷர்மா இருந்துள்ளார்.
மேலும், இந்தியாவில் அதிகம் அறியாத ஸ்பிரிங்போர்டு டைவிங் விளையாட்டில், தனது 18வது வயதிலேயே சாம்பியன் ஆனவர் சாரு. ஆனால், பிறகு அந்த விளையாட்டில் இருந்து ஓய்வுபெற்று, வர்ணனை பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். தற்போது, ஐபிஎல் ஏல மேடையின் மூலம், இன்னும் அதிக கவனம் பெற்றுள்ளார் இந்த சாரு ஷர்மா.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'ரெய்னா'வை குறி வைக்காத 'சிஎஸ்கே'.. ஏமாந்த ரசிகர்கள்.. "அவர நாங்க எடுக்காம போனது இதுனால தான்.." வெளியான காரணம்
- ஐபிஎல் ஏலத்தில்.. சிரித்த முகத்துடன் திடீர் 'Entry' கொடுத்த நபர்.. "எல்லா டீமும் எந்திருச்சு கைதட்ட ஆரம்பிச்சுட்டாங்க"
- ஏலத்துக்கு பிறகு.. தமிழில் ட்வீட் போட்ட மும்பை இந்தியன்ஸ் அணி.. பின்னணி என்ன?
- IPL MEGA AUCTION: குட்டி AB டிவில்லியர்சை ஏலத்தில் எடுத்த மும்பை இந்தியன்ஸ்! எத்தனை கோடிக்கு தெரியுமா?
- தோனியின் ஆசையில் மண் அள்ளி போட்ட IPL அணி... CSK வளர்த்த பையனை கொத்தாக தூக்கிட்டாங்க! சோகத்தில் சென்னை ரசிகர்கள்
- ஒரே அணிகளில் பரம எதிரிகள்... அந்த சம்பவத்தை எல்லாம் மறந்துருப்பாங்களா? இனி என்ன நடக்க போகுதோ
- மும்பை வீரருக்கு கொக்கி போட்ட சிஎஸ்கே.. "கடைசி'ல என்னய்யா இவ்ளோ ட்விஸ்ட் வைக்குறீங்க??"
- விறுவிறுப்பாக நடந்த ஏலம்.. திடீரென சரிந்து விழுந்த ஏலதாரர்.. பதற்றம் அடைந்த கிரிக்கெட் ரசிகர்கள்
- IPL AUCTION: கோலாகலமாக தொடங்கி சூடு பிடித்த ஐபிஎல் ஏலம்! 10 அணிகளும் மும்முரம்... முழு தகவல்
- பொல்லார்டு, ஜடேஜாவை ஏலத்தில் எடுக்க பயன்படுத்தப்பட்ட சைலன்ட் டை பிரேக்கர் ரூல்..அப்படின்னா என்ன?