ஒட்டுமொத்த 'இந்தியாவே' திரும்பி பார்க்கும் இந்த 'நீரஜ் சோப்ரா' யார்...? - பலரும் 'அறியாத' சுவாரஸ்யத் தகவல்கள்...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நீண்ட வருடங்கள் கழித்து இந்தியாவிற்கு தங்க பதக்கம் பெற்றுத்தந்த நீரஜ் சோப்ரா குறித்து அறியப்படாத பல சுவாரஸ்யமான செய்திகள் வெளிவந்துள்ளன.

ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்று கொண்டிருக்கும் 32-வது ஒலிம்பிக் தொடரில் ஈட்டி எறிதல் போட்டியின் மூலம் முதன்முதலாக இந்தியாவிற்கு தங்க பதக்கம் வென்றுள்ளார் நீரஜ் சோப்ரா.

தற்போது இவரை குறித்து பல சுவாரஸ்யத் தகவல்கள் வெளியாகியிருக்கிறது. ஈட்டி எறிதல் போட்டியில் பங்கு பெற்ற நீரஜ் சோப்ராவின் சொந்த ஊர் ஹரியானா மாநிலம் பானிபட் ஆகும்.

இவர் தன்னுடைய கல்லூரி படிப்பை சண்டிகரில் உள்ள டிஏவி கல்லூரியில் முடித்தபின், இந்திய ராணுவத்தில் இணைந்தார். தற்போது ராணுவத்தில் சுபேதார் பதவியில் இருக்கும் நீரஜ், ராஜ்புட்டானா ரைபில்ஸ் பிரிவில் பணிபுரிகிறார்.

விவசாயி மகனாக பிறந்த நீரஜிற்கு சிறுவயதில் இருந்தே விளையாட்டின் மீதுள்ள ஆர்வத்தினால் எப்படியாவது இந்திய விளையாட்டு வரலாற்றில் தன் பெயரை பொறிக்க இடைவிடாத முயற்சியை  மேற்கொண்டுள்ளார். வாரத்தில் ஆறு நாட்கள் தீவிரமாக பயிற்சி செய்துள்ளார்.

என்னதான் ராணுவ பணியில் இருந்தாலும், விளையாட்டின் மீதுள்ள மோகத்தில் பல்வேறு சர்வதேச போட்டிகளில் கலந்துக்கொண்டு தன் திறமையை வளர்த்துள்ளார்.

தங்கம் வெல்வதற்கு முன்பு நீரஜ் யார் என்று நமக்கு தெரியாமல் இருக்கலாம், ஆனால் விளையாட்டு உலகில் புகழ் பெற்றவராகவே இருந்துள்ளார்.

கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் தான் நீரஜ் தன்னை ஈட்டி எறிதல் விளையாட்டில் ஈடுபடுத்தத் தொடங்கியுள்ளார். பல ஆண்டுகள் பயிற்சியில் கடந்த 2016-ஆம் ஆண்டு போலந்து நாட்டில் நடைபெற்ற உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றுள்ளார்.

அதுமட்டுமில்லாமல், கடந்த 2018-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் போட்டியிலும், இந்தோனேசியாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் தங்கம் வென்றார்.

இந்தியாவிற்கு பெருமை சேர்த்து தந்த நீரஜ் எறிந்த ஈட்டியின் தூரம் சுமார் 87.58 மீட்டர். ஒலிம்பிக் தடகளப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார். இந்தியாவுக்காக வரலாறு படைத்த நீரஜ் சோப்ராவுக்கு ஹரியானா மாநில அரசு ரூ.6 கோடி ரொக்கப் பரிசு அறிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல், பிசிசிஐ ரூ.1 கோடி ரொக்கப்பரிசு அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்